பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மேலும் அவர் அகனைந்திணை பற்றிய செய்தியை அகத்திணையியலில் கூறியதோடமையாது அவற்றில் கைகோள்களுக்குக் களவியல் கற்பியல் என வேறு இயல்கள் வகுத்துக்கொண்டு ஒதுவதிலிருந்தும் செய்யுள் உறுப்பாகத் தினை கைகோள் கூற்று கேட்போர் காலம் பயன் மேம்பாடு எச்சம் முன்னம் பொருள் துறை என்னும் பன்னிரண்டையும் கூறுவதிலிருந்தும் உணர்ந்து கொள்ள லாம். இன்னும் எட்டுத்தொகையுடன் நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு அகநானூறு என்னும் நான்கும் அகனைந்தினை இலக்கியமாக இருப்பதும் கலித்தொகையில் சிலபாடல்களொழியப் பலபாடல்கள் அகனைந்திணைப் பாடலாக இருப்பதும் கீழ்க்கணக்கு நூல்களுள் ஐந்திணை என்பவையும் முப்பாலான திருக்குறளில் காமத்துப்பால் முற்றிலும் அகனைந்திணையாக இருப்பதும் மேற்கருத்தை வலியுறுத்தும். அகத்திணையிலிருந்து புறத்தினைத் தோற்றம் தொல்காப்பியத்தில் புறத்திணையியலைப் படிக்கத் தொடங்கும் இக்காலத்து அறிஞர் சிலர், புறத்திணையைத் தொகுத்துணர்த்தும் நூற்பா இயல் தொடக்கத்தில் இருந் திருக்க வேண்டும் என்றும், அந்நூற்பா காலப்பழமையால் ஏடுபெயர்த்தெழுதுவோரால் விடுபட்டது போலும் என்றும் கூறுகின்றனர். அப்படி ஒரு நூற்பா இருந்து விடுபட்டதாகக் கருதுவதற்கு இடமேயில்லை என்க, தொல்காப்பியர் அகத்திணை இயலின் தொடக்கத்தே கைக்கிளை ஐந்திணை பெருந்திணை என ஏழு அகத்திணைகளைக் கூறி, அதன்பின் அளவு பற்றிய செய்திகளையெல்லாம் கூறிவிட்டுப் புறத்திணையியலின் தொடக்கத்தே அகத்தினை மருங்கின் அரில்தப உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின் என்னும் நூற்பாவால் அகத்திணை ஏழிலிருந்தே புறத்தினை ஏழும் தோன்றுகிறது என்றும் கூறுகிறாராதலால் புறத்திணை இத்துணை என்று உணர்த்தும் நூற்பாவொன்றைத் தொல் காப்பியர் யாத்திலர் என்க.