பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 பெருங்கிளைமை ஆயிற்று" என்பர் இளம்பூரணர். (தொல், அகத்திணை 1) கைக்கிளையும் பெருந்தினையும் ஐந்தாகப் பிரித்து வழங்கப்படாமை ஒத்த காமம் ஐந்து ஒழுக்கமாகப் பிரிக்கப்பட்டு வழங்குதலால் ஐந்திணை எனப் பெயர் பெற்றது என்றோம். அங்ங்னமாயின் கைக்கிளை, பெருந்திணை என்பனவற்றையும் ஐந்தொழுக்கமாகப் பிரித்து வழங்கப்படாமை என்னை எனின்? ஐந்திணை என்பது ஒத்த அன்புடைக் காமமாதலின் அதனை உடைய தலைவன் தலைவியர்க்குப் புணர்வின்கண் இன்பமும் ஏனைய பிரிவு இருத்தல் இரங்கல் ஊடல் என்னும் இவற்றில் துன்பமும் உண்டாம். இவ்வாறு உண்டாகப் பெறுவதே முறையுமாகும். ஆனால், கைக்கிளை ஒருபாற் காமமாதலால் அங்கு புணர்தல் செம்மையாய் இயலாது. செம்மையாய் இயலாத அப்புணர்வு ஒருபாலார்க்கு இன்பத்தையும் மற்றொரு 4ாலார்க்குத் துன்பத்தையும் உண்டாக்கும். ஏனைய பிரிவு முதலானவை ஒரு பாலார்க்குத் துன்பமாகவும், மற்றொரு பாலார்க்கு இன்பமாகவும் இருக்கும். அதுபோல், பெருந்திணை என்பதும் இருவரும் மனம் விரும்பாத காமமாதலால் புணர்வு இருவருக்குமே மகிழ்வா யிராது, பிரிவு முதலாயின இன்பமாகவே இருக்கும். இக்காரணங்களால் ஒத்த காமமே ஐந்து திணையாகப் பிரித்து ஒதுதற்குச் சிறந்ததாயிற்று. அகனைந்தினைச் சிறப்பு தொல்காப்பியர் அகத்திணை புறத்திணை என்ற இரண்டில் அகத்திணையை முதலாவதாகவும், அகத்தினை ஏழில் நடுவணதாகிய அகனைந்தினையைச் சிறப்பாகவும் கருதுகின்றார். அவர் அகத்திணையை "மிக்க பொருள்" (பொருளியல் - 23) என்று குறிப்பிடுதலைக் காண்க .