பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 அடுத்து புணர்தல் பிரிதல் முதலான முறை உரிப்பொருள் நிகழும் முறையாகும். புறத்திணையியலில் குறிஞ்சியை முதலாகக் கூறியது போர் இயற்றும் முறையாகும். எந்த நாட்டிலும் போர் இயற்றும் முறை நான்கு பகுப்புள் அடங்கும். ஒரு நாட்டு மன்னன் மற்றொரு நாட்டுப்பகை மன்னனிடம் போர் தொடங்கும் பொழுது போரின் முன்னோடியாகச் சில செயல்கள் நிகழும். அது பகைவர் நாட்டுள்ள ஏதாவது ஒரு பொருளைக் கவரும் முறையில் தொடங்கும். அந் நிகழ்ச்சியைத்தான் தொல்காப்பியர், வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந் தோம்பல் மேவற் றாகும் (புறத்திணை - 2) என்று தமிழ்நாட்டு முறைக்கேற்ப நிரை கவர்தலாகக் கூறியுள்ளார். அதனை அவர், வஞ்சி தானே முல்லையது புறனே எஞ்சா மண்நசைஇ வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே

  • H (புறத்திணை - 6)

என்று கூறுகின்றார். பகைவன் மண்ணைக் கவரும் போர் நிகழ்ந்தபின், பகைவனை அழித்தற்காக அவன் வாழும் நகரத்தை அரண்மனையை முற்றுகை செய்து நடத்தும் போர் நடைபெறும், இதனை அவர், உழிஞை தானே மருதத்துப் புறனே முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் அனைநெறி மரபிற் றாகு மென்ப (புறத்திணை - 8) என்று கூறுகின்றார். இம்முறையின்றிப் பகைமன்னர் இருவரும் வலிமையுடையவராக இருப்பின் அவர்தம்முள் யார் மிக்க வலிமையுடையவர் என்பதை அறிந்து கொள்வதற்காக இருவரும் களம் குறித்துப் படையணி வகுத்துப் போர் புரிவர். இதனைத் தொல்காப்பியர்,