பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 தும்பை தானே நெய்தலது புறனே மைந்து பொருளாக வந்த வேந்தனை சென்றுதலை யழிக்கும் சிறப்பின் றென்ப (புறத்தினை - 12) என்று கூறுகின்றார். இவ்வாறு போர் நிகழ்ச்சிக்கு முன்னோடியான செயலும் அதன்பின் பகைவர்தம் மண் கருதிய போரும், பின்னர் அவர் வாழுமிடத்தை முற்றுகையிட்டுச் செய்யும் போரும் அவையின்றாயின் தம் வலிமையை நிலைநாட்டிச் செய்யும் போரும் என உலகத்து நிகழும் போரெல்லாம் நான்கு வகையுள் அடங்கும். இவற்றினைத் தொல்காப்பியர் தமிழ் நாட்டின் வழக்குக்கேற்பக்'. குறிஞ்சி என்றும் அகத்திணைப் புறனாய்ப் பகைவர்தம் ஆனிரையைக் கவர்வது வெட்சி என்னும் புறத்திணையாகும் என்றும், முல்லை என்னும் அகத்திணைப் புறனாய்ப் பகைவர்தம் மண்ணினைக் கொள்வது வஞ்சி என்னும் புறத்திணையாகும் என்றும், மருதம் என்னும் அகத்திணைப் புறனாய்ப் பகைவர் வாழிடத்தை முற்றி அழிப்பது உழிஞை என்றும், நெய்தல் என்றும் அகத்தினைப் புறனாய்ப் பகைவர்தம் வலிமையை அழிப்பது தும்பை என்னும் புறத்திணையாகுமென்றும் கூறுகிறார். போர் முடிவிலே கிட்டுவது ஒரு சாரார்க்குத் தோல்வியும் மற்றொரு சாரார்க்கு வெற்றியும் ஆகும். தோல்வியைச் சிறப்பித்துப் புலனெறிவழக்கம் செய்தல் இலக்கிய மரபில்லை. அதனால் அதற்கொரு இலக்கணம் எழவில்லை. ஓர் அரசன் தன் பகைவரைப் போரிட்டு வெல்லின் அவ்வெற்றி நிலையைப் புலவர் பாடுவர். செறுத்த செய்யுள் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன் இன்றுள னாயின் நன்றுமன் என்ற நின் ஆடுகொள் வரிசைக் கொப்பப் பாடுவன் மன்னாற் பகைவரைக் கடப்பே s (புறநா. 53) இந்நிகழ்ச்சியைச் சேரன் மாந்தரஞ்சேரல் இரும் பொறையைப் பொருந்தில் இளங்கீரனார் பாடிய பாட்டால் உணரலாம்.