பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 போல, இக்காஞ்சித் திணை வெட்சி முதலிய புறத்திணை ஐந்திற்கும் புறனாகலானும் இக்காஞ்சித்திணைபோல் அப்பெருந்திணையும் நோந்திறம் பற்றி வருதலாலும் ಅ இது புறனாயிற்று என்றனர்.அவர். (புறத்திணையியல் கைக்கிளை செந்நிறம் பெருந்திணை நோந்திறம் அத்திறம் இரண்டும் அகத்திணை மயங்காது அத்தினை யானே யாத்தனர் புலவர் (இளம்பூரணர் மேற்கோள் - பொருளதிகாரம் - 55) என்னும் நூற்பா பெருந்தினையானது நோயும் இன்பமும் என்னும் இரண்டில் நோயினையே தரும் என்று கூறுகின்றது. அதனால் அதனைப் பொருந்தாக் காமம் என்று கூறுதல் பொருந்துவதாகும். காஞ்சித்திணை முற்றிலும் துன்பமே ஆதலின், அதனை நோந்திறமாகிய பெருந்திணைப் புறன் என்று கூறுதல் மிகப் பொருந்துவதாம். ஒருபாற் காமமாகிய கைக்கிளை என்னும் அகத் திணை யின் புறன் பாடாண் என்று கூறுகின்றார் தொல் காப்பியர். பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே நாடுங் காலை நாலிரண் டுடைத்தே (புறத்திணை - 20) என்பது அவர் கூறும் நூற்பா. இந்நூற்பா உரையுள் இளம்பூரணர் "பாடாண் பகுதியாகிய எட்டுவகையாவன - கடவுள் வாழ்த்துவகை வாழ்த்தியல் வகை மங்கலவகை செவியறிவுறுத்தல் ஆற்றுப்படைவகை, பரிசிற்றுறைவகை, கைக்கிளை வகை, வசை வகை என்பன" என்று கூறி, கைக்கிளைக்குப் பாடாண் புறானாயவாறு என்னை எனின்? கைக்கிளையாவது ஒருநிலத்திற்கு உரித்தன்றி ஒருதலைக் காமமாகி வருமன்றே; அதுபோல இதுவும் ஒருபாற்கு உரித்தன்றி ஒருவனை ஒருவன் யாதானும் ஓர் பயன் பகுதியவழி, மொழிந்து நிற்பது ஆதலானும், கைக்கிளையாகிய காமப்பகுதிக்கண் மெய்ப்பெயர் பற்றிக் கூறுதலாலும், கைக்கிளை போலச் செந்திறத்தாற்