பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 கூறுதலாலும் அதற்கு இது புறனாயிறற்று. நோந்திறமாவது கழிபேரரிக்கம்; செந்திறமாவன அஃது அல்லாதன" என்பர். புறத்தினையில் போர்ச்செய்தியே கூறப்பட்டுள்ளன என்பவரெல்லாம் வாகை, காஞ்சி, பாடாண் துறைகளை ஊன்றிப் படிக்கவேண்டும். மேலே கூறியவற்றையெல்லாம் கருத்தில் அமைத்துக் கொண்டு பார்த்தால் காமம் என்ற ஒன்றிலிருந்தே மக்க ளுடைய அகவாழ்வு புறவாழ்வுகளெல்லாம் தோன்றுகின்றன என்று தொல்காப்பியர் கருதுகிறார் என்பது நமக்குப் புலனாகின்றது. தொல்காப்பியர் அன்பின் ஐந்திணையை இன்பம் பற்றியது என்று கூறாமல், இன்பம் பொருள்அறன் என்னும் முப்பொருள் பற்றியது என்று கூறுகின்றார். இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்தினை மருங்கின் காமக் கூட்டம் (அகத்திணையியல் - 1) என்பது அவர் கூறும் நூற்பா. இந்நூற்பா உரையுள் இளம்பூரணர் அன்பொடு புணர்ந்த ஐந்திணை என்றதனால் கைக்கிளை பெருந்திணையை ஒழிந்து நின்ற முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் எனக் கொள்ளப்படும். அவை அன்பொடு புணர்ந்தவாறு என்னை எனின்? கைக்கிளை பெருந்திணையைப் போலாமை, ஒத்த அன்பின ராகிப் புணர்தலும் பிரிதலும் இருத்தலும் இரங்கலும் ஊடலும் நிகழ்த்துப ஆதலாலும் அவை நிகழுங்கால் அகத்திணைக்கு உறுப்பாகிய இடமும் காலமும் கருப் பொருளும் துணையாகி நிகழுமாதலாலும் இவை அன்பொடு புணர்ந்தன என்க. அஃதேல், ஐந்தினைப் புறத்தவாகிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை என்பனவும் அன்பொடு புணர்ந்தனவாம் எனின், TO