பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 என்பர். இவர் தூக்கும் தொடையும் அடியும் சேர்ந்தது யாப்பு என்பர். பல்காயனாரும், யாப்பியல் தானே யாப்புற விரிப்பின் எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோடு இழுக்கா மரபின் இவற்றொடு பிறவும் ஒழுக்கல் வேண்டும் உரைத்திசி னோரே என்பர். இவர் எழுத்தசை சீர்தளை அடிதொடை துக்கோடு கூடியது யாப்பு என்பர். யாப்பருங்கலமும், எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோடு இழுக்கா நடையது யாப்பெனப் படுமே என்றும், செய்யுள் தாமே மெய்பெற விரிப்பின் பாவே பாவினம் எனவிரண் டாகும் என்றும் கூறுகிறது. இந்நூல் யாப்பெனப்படுவது எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோடு கூடியது யாப்பு என்றும் அந்த யாப்பாகிய செய்யுள் பாவும் இனமும் என்று இரண்டு வகைப்படும் என்றும் கூறுகின்றது. ஆனால் நன்னூலாசிரியர் மட்டும் இவ்வாறு கூறவில்லை. அவர், பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல சொல்லாற் பொருட்கிட னாக உணர்வினின் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் என்பர், இரத்தம் முதலிய பலவகைத் தாதுக்களினால் உயிராகிய ஒன்றற்கு இடனாக அமைந்த உடம்பினைப் போலப் பலவகைச் சொற்களால் பொருட்கு இடனாக உணர்வினின் வல்லவர் அணி பெறச் செய்யப்படுவன செய்யுள் என்பர். இந்நூற்பா பாடு பொருளை உயிர்போலச் சிறப்பித்துக் கூறுகிறது.