பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 செய்யுள் அல்லது பாட்டு செய்யுள் என்பது எதனை? என்று வினாவுவோம். அதற்கு அறிஞர் தரும் விடையினை ஆராய்வோம். "உறுப்பியலிற் கூறிய எழுத்து அசை முதலிய அறுவகை உறுப்புகளினால் சொற்செறிவும் பொருட்செறிவும் பொருந்த, சொல்லணியும் பொருளணியும் அமைய, தொடையின்பமும் நடையின்பமும் என்ற ஒசை நலத்துடன் செய்வது செய்யுள்" என்பவர் புலவர் குழந்தை அவர்கள். (யாப்பதிகாரம் - பக்கம், 45) செய்யப்படுவது தான் கெய்யுள். எதன்மேற் செய்தல் வேண்டும் என்று வினாவின் அதற்கு விடையிருத்தல் வேண்டும். உலகியலில் இத்தெய்வத்தின் மேற்பாடு; இந்த வள்ளல் மேற்பாடு: இந்த நீதி பற்றிப்பாடு, இந்த நிகழ்ச்சி பற்றிப் பாடு என்பார்கள். இப்பல பொரு ளெல்லாம் அடங்க ஏதாவது ஒரு பொருள்மேல் பாடப் படுவது என்றோ செய்யப்படுவது எனறோ குறிப்பிட்டு அப்பொருள்மேல் பாடப்படுவது பாட்டு, செய்யப்படுவது செய்யுள் என்று நாம் பாட்டிற்கும் செய்யுட்கும் இலக்கணம் கூறிக்கொள்ளுதல் வேண்டும். அ.கி. பரந்தாமனார் என்னும் அறிஞர் "கவிதை என்பதும் செய்யுள் என்பதும் ஒன்றே கவிதை என்பது சொல்லாலே உருப்பெற்றுப் பொருளாலே விருப்பூட்டுவது. அதனோடு ஒசைநயமும் சேர்ந்திருக்க வேண்டும்" என்பர். (கவிஞராக - பக்கம். 182). புலவர் குழந்தை அவர்களும், அ.கி. பரந்தாமனார் அவர்களும், முறையே பொருட்செறிவு என்றும், பொருளாலே விருப்பூட்டுவது என்றும் கூறுவது நேரடியாகப் பாடுபொருளை நமக்கு அறிவிக்கும் சொற்றொடராக இல்லை. மேலே கூறிய இருவரேயன்றி முற்காலப் புலவரில் நற்றத்தனாரும், * யாப்பெனப் படுவது யாதென வினவின் தூக்கும் தொடையும் அடியுமிம் மூன்றும் நோக்கிற் றென்ப நுணங்கி யோரே