பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 அகவ லென்ப. தாசிரி யம்மே (81) அஃதன் றென்ப வெண்பா யாப்பே (82) துள்ள லோசை கலியென மொழிப (83) தூங்க லோசை வஞ்சி யாகும் (84) மருட்பா ஏனை இருசா ரல்லது தானிது வென்னும் தனிநிலை இன்றே (8.5) அவ்வியல் பல்லது பாட்டாங்கு கிளவார் (86) தூக்கியல் வகையே ஆங்கென மொழிப 187) மேற்கண்ட நூற்பாக்களின் தொடக்கத்திலே இளம்பூரணர் "இது துரக்காமாறு உணர்த்துவார் அவற்றுள் ஆசிரியத்திற்குரிய ஓசை உணர்த்துதல் துதலிற்று" என்று கருத்துரை கூறிவிட்டு, "அகவல் என்னும் ஒசை ஆசிரியத் திற்கு என்றவாறு துக்கெனினும் ஒசை எனினும் ஒக்கும்" என்று உரை கூறியுள்ளார். இவர் தூக்கென்பதை ஓசை என்றே கருதுகிறார். இவர் இவ்வாறு உரை கூறுவதற்குத் "துள்ளலோசை கலியென மொழிப" "துரங்கலோசை வஞ்சி யாகும்" என்னும் நூற்பாக்கள் அரண் செய்கின்றன. பேராசிரியர் நிறுத்த முறையானே துக்கு உணர்த்து வான் எழுந்தான். அஃதாவது பா துணிக்கப்படுவதாகலான் அப்பாவினை உணர்த்துகின்றான் என்பது என்பர். இவர் கருத்துப்படி பா என்னும் ஒசை அகவலாகவும் செப்ப லாகவும் துள்ளலாகவும் துரங்கலாகவும் துணிக்கப்படுகின்றது என்பர். துரக்கினை உணர்த்த வந்த ஏழு நூற்பாக்களையும் நாம் படித்துப் பார்த்தால் பா என்னும் பரந்துபட்ட ஒசை அகவல் முதலியனவாய்த் துணிக்கப்பட்டு நிற்கும் என்ற கருத்துடைய சொற்கள் வெளிப்படையாகவும் இல்லை. குறிப்பாகவும் இல்லை. பதினோராவது உறுப்பாகப் பாவினைப் படிக்கப் போகிறோம். அப்பாவினைத் துணிக்கும் துரக்கை எட்டாவது உறுப்பாக நிறுத்தி ஓதுவதற்கு என்னும் இயைபில்லையே. அதனால் மேலே தூக்கினை உணர்த்த வந்த ஏழு நூற்பாக்களும், இளம்பூரணர் கருதுகிறபடி, ஆசிரியப்பா வெண்பா கலிப்பா வஞ்சிப்பா மருட்பா என்னும் பாக்கள் முறையே அகவலோசை செப்பலோசை