பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 துள்ளலோசை துங்கலோசை செப்பலும் அகவலும் கலந்த கலப்போசை என்னும் இவ்வோசைகளைப் பெற்றுவரும் என்பதை உணர்த்துதற்கு வந்தன என்றே கொள்ளவேண்டும். யாப்பருங்கல விருத்தியுரை ஆசிரியரும் "செப்பல் இசையன வெண்பா" என்னும் நூற்பாவுரையில் "பிறரும் வெண்பாவிற்கு ஓசை இவ்வாறே கூறினார்" என்று கூறி, அகவல் என்ப தாசிரி யம்மே அதாஅன் றென்ப வெண்பா யாப்பே என்றார் தொல்காப்பியனார் என்று துரக்கினை உணர்த்தும் இந்நூற்பாக்களையே எடுத்துக் காட்டியுள்ளார். எனவே துக்கென்னும் உறுப்பு ஆசிரியப்பா முதலானவற்றுக்குரிய ஒசையை உணர்த்துமேயானால் பா என்னும் உறுப்பு எவ்வாறு வரும் என்று வினா எழுகின்றது. பா என்னும் உறுப்பு தொல்காப்பியர் 'பா' என்னும் உறுப்பினை, "ஆசிரியம் வஞ்சி" (101) என்னும் நூற்பாவிலிருந்து, "கூற்றும் மாற்றமும்" (149) என்னும் நூற்பா வரை உள்ள நாற்பத்தொன்பது நூற்பாக்களால் கூறிச் செல்கின்றார். இங்கே கூறப்படும் செய்திகள் அனைத்தும் பா என்னும் உறுப்பினுக்குரிய செய்திகளாகும். பேராசிரியர் இந்த நாற்பத்தொன்பது நூற்பாப் பொருள்களெல்லாம் பா என்பதற்குரியவென்று கருதாமல் மிக எளிதாகப் 'பா' என்பது பரந்துபட்ட ஒசை என்று கருதிவிட்டார். இவர் கூறுகின்ற ஓசை என்பது எட்டாவது உறுப்பாகிய துக்கென்பதே என்னும் செய்தி மேலே கூறப்பட்டது. இனிப் 'பா' என்னும் உறுப்பினைப் பற்றி ஆராய்வோம். 'பா' என்னும் உறுப்பினைப் பற்றிக் கூறத்தொடங்கிய தொல்காப்பியர் முதற்கண், ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்ப பாவகை விரியே (101) என்ற நூற்பாவினை ஒதியுள்ளார். இந்நூற்பாவிற்கு இளம்பூரணர் "நிறுத்த முறையானே பாவாமாறு உணர்த்து