பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 வான் எடுத்துக் கொண்டார். அவை இனைத்தென வரை யறுத்துதல் நுதலிற்று" என்று கருத்துக் கூறிவிட்டு, "ஆசிரிய மெனவும் வஞ்சி எனவும் கலி எனவும் நான்கு இயல்பினை யுடைத்து என்று சொல்வர் பாவினது வகையை விரிக்கு மிடத்து என்றவாறு" என்று பொழிப்புரை கூறியுள்ளார். எனவே இத்தொடக்க நூற்பா 'பா' என்னும் உறுப்பு பரந்துபட்ட ஒசையையுடையது என்று கூறாமல் அது நான்கு பகுப்பினையுடையது என்னும் செய்தியையே நமக்குக் குறிப்பிடுகின்றது. இதனை அடுத்த நூற்பா, அந்நிலை மருங்கின் அறமுத லாகிய மும்முதற் பொருட்கும் உரிய என்ப (102) ா என்னும் நூற்பாவாகும். இந்த நூற்பாவினை ஆழ்ந்து கருதிப் படிக்கவேண்டும். இதன் உரை வருமாறு: பா. என்பது ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலி என்னும் அந் நிலை மருங்கினவாய் வரும்பொழுது அப் பாக்கள் அறம் முதலிய மும்முதற் பொருட்கும் உரியனவாய் அவற்றினைப் பாவி (பொருந்தி) வரும்" என்பதாம். யாப்பருங்கல விருத்தியுரை ஆசிரியரும் செய்யுள் தாமே" என்னும் நூற்பா உரையில் "அறம் பொருள் இன்பம் வீடு என இவற்றைப் பாவி நடத்தலின் பா என்பதும் காரணக்குறி" என்று கூறுகிறார். (யா - வி - கழகப்பதிப்பு. பக். 21) யாப்பருங்கலக் காரிகை உரையாசிரியரும் "இனி எழுத்து முதலாகிய எட்டினையும் காரணக் குறியான் வழங்குமாறு, என்று கூறிவிட்டு "எழுதப்படுதல் எழுத்தே" என்ற நூற்பா வொன்றினைக் காட்டுகின்றார். அந்நூற்பாவும் "பாவி நடத்தலில் பாவே" என்று கூறுகிறது. பாவுதல் வினைக்கு அறம் முதலான முதற் பொருள்கள் செயப்படு பொருளாதல் வேண்டும். யாப்பருங்கல விருத்தியுரை ஆசிரியர் மேலும் "வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சியெனப் பண்பாய்ந் துரைத்த பாநான் காகும்" என்னும் நூற்பா வுரையில், அறமுதனான் கென்றும் அகமுதனான் கென்றும் திறனமைந்த செம்மைப் பொருண்மேல் - குறைவின்றிச்