பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 செய்யப் படுதலால் செய்யுள்; செயிர்தீரப் பையத்தாம் பாவுதலாற் பா என்னும் பாட்டினைத் தந்து "இதனைப் பிரித்து உரைத்துக் கொள்க" என்று எழுதியுள்ளார். மேற்கண்ட பாட்டின் பிரித்துரை வருமாறு: அறம் பொருள் இன்பம் வீடு என்றும், அகம் புறம் அகப்புறம், புறப்புறம் என்றும் கூறப்படும் கூறுபாடமைந்த நல்ல பொருள்கள் மேல் குறைவின்றிச் செய்யப்படுவன செய்யுளாம். குற்றம் நீங்க மேலே கூறிய நான்கு நான்கான பொருண்மேல் பாவி நடத்தலால் பா வாகும்' என்பதாம். நன்னூலாசிரியரும், பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல சொல்லாற் பொருட்கிட னாக உணர்வினின் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் என்று கூறுதலைக் காண்க. செய்தல், பாவுதல் என்ற வினைக்கு அறம் முதலான பொருள்கள் அல்லது அகம் முதலான பொருள்கள் செயப்படு பொருளாகும். எனவே செய்யப்பட்டது செய்யுள் பாவியது பா அல்லது பாட்டு என்று ஆகும். இக்கருத்தினை உட்கொண்ட தொல்காப்பியர் பா என்பது ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலி என நான்காய்வரும் என்று கூறி, அப் பா நான்காக வரும் அந்நிலை மருங்கில் அறம் முதலான பொருள்களுக்கு உரியனவாய் வரும் என்றனர். எனவே பொருளுக்கு இடனாகப் பொருளைப் பாவி வருவது பாவிற்கு இலக்கணம் ஆயிற்று. மும்முதற் பொருளைப் பாவி வருதலாகிய இச்செய்தி வேறு எந்த உறுப்பிற்கும் உரியதாக ஒதப்பெறவில்லை. பா என்னும் உறுப்பிற்கு உரியதாகவே ஒதப்பட்டுள்ளமையைக் காண்க. யாப்பு என்னும் உறுப்பு எழுத்து முதலா ஈண்டிய அடியில் குறித்த பொருளை முடிய நாட்டுதலாகும். பா என்பது பொருள்களைப் பாவி நடப்பதாகும். யாப்பருங்கல விருத்தி ஆசிரியர் மருட்பாவினைப் பற்றி எழுதும் பொழுதும், "கங்கை யமுனைகள் சங்கமம்