பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 போலவும், சங்கர நாராயணரது சட்டகக் கலவியே போலவும் வெண்பாவும் ஆசிரியமுமாய் விராஅய்ப் புறநிலை வாழ்த்து முதலாகிய பொருள்கள் மேல் யாப்புற்று மருட்சி உடைத் தாகப் பாவிநடத்தலின் மருட்பா என்று வழங்கப்படும் என்பாரும் உளர்" என்று கூறியிருத்தலையும் காண்க. காரிகை முதலியன க்ாரிகை என்னும் யாப்பிலக்கண நூல் செய்யுட்குரிய எழுத்து அசை சீர் தளை அடி தொடை என்னும் ஆறு உறுப்புக்களையும் முறையே உறுப்பியலில் உணர்த்துகின்றது. பின்னர் பாவையும் இனத்தையும் செய்யுள் இயலில் உணர்த்துகின்றது. அவ்வியலில் பாவையும் இனத்தையும் உணர்த்தத் தொடங்கும் பொழுது பாவும் இனமும் பாடு பொருளைப் பாவிவரும் என்று கூறுதல் வேண்டும். அந்நூல் அவ்விடத்தும் பிறவிடத்தும் பாக்கள் பாடு பொருளைப் பாவிவரும் என்று கூறவேயில்லை. ஆனால் மருட்பாவிற்கு இலக்கணம் கூறும்பொழுது மட்டும், பண்பார் புறநிலை பாங்குடைக் கைக்கிளை வாயுறைவாழ்த் தொண்பாச் செவியறி வென்றிப் பொருண்மிசை ஊனமில்லா வெண்பா முதல்வந் தகவல்பின் னாக விளையுமென்றாய் வண்பான் மொழிமட வாய்மருட் பாடெவனும் வையகமே என்று மருட்பா இன்ன இன்ன பொருளில் வரும் எனக் கூறுகிறது. யாப்பருங்கலம் என்னும் யாப்பிலக்கண நூலும் காரிகையைப் போலவே செய்யுள் உறுப்புக்களையெல்லாம் உறுப்பியலில் கூறிவிட்டுப் பாவையும் பாவினத்தையும் செய்யுளியலில் கூறுகின்றது. அந்நூலும் பாக்கள் பாடு பொருளைப் பெற்றுவரும் என்று கூறவேயில்லை. ஆனால் உரையாசிரியர் மட்டும் பா என்பதன் காரணத்தை உணர்த்தும் பொழுது அறம் முதலான பொருள்களைப் பாவிநடத்தலால் பா என்பதும் காரணக்குறி என்றனர். பாடுபொருளைக் கருதாமல் யாப்பிலக்கண நூல்கள் எழுந்துள்ளனவே என்று இச்செய்தியை ஓர் அறிஞரிடம்