பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 நான் கூறியபொழுது பாட்டென்றால் ஏதாவது பொருள்கள் மேல் பாடத்தானே போகிறோம்; அதனால் பாக்கள் பாடுபொருளைப் பெற்றுவரல் வேண்டும் என்று செய்தி கூறவேண்டுவதில்லை என்றார். உலக வழக்கிலே வழங்கும் சொல்லும் செய்யுள் வழக்கிலே வழங்கும் சொல்லும் பொருள் குறித்து வரும் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி யாயினும் இலக்கணம் எழுதுபவர் இருதிணை ஐம்பாற் பொருளையும் தன்னையும் உணர்த்தி நிற்பது சொல் என்று கூறத்தான் வேண்டியுள்ளது. தொல்காப்பியரும் சொல்லதி காரத்திலே எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று பொதுவாகவும் ஒதியுள்ளார். செய்யுளும் பாட்டும் தொல்காப்பியர் வழங்குகிற செய்யுள் என்னும் சொற்கும் பிற்காலத்தார் வழங்குகிற செய்யுள் என்னும் சொற்கும் வேறுபாடு உண்டு. தொல்காப்பியர் பாட்டும், உரையும், நூலும், வாய்மொழியும், பிசியும், அங்கதமும், முதுசொல்லும் ஆகிய ஏழினையும் செய்யுள் என்பர். செய்யுளில் பாட்டு என்பது ஒரு பிரிவாகும் தொல் காப்பியர்க்கு. பிற்காலத்தார் பாக்களையும் இனத்தினையும் செய்யுள் அல்லது பாட்டு என்பர். காரிகை ஆசிரியர் "யாப்பும் பாட்டும் துக்கும் தொடர்பும் செய்யுளை நோக்கின் றென்ப துணங்கி யோரே" என்றொரு நூற்பாவினைக் காட்டுகிறார். பிற்காலத்தார் யாப்பிலக்கண நூலில் செய்யுளியல் என்ற இயலினை வகுத்துக் கொண்டு அங்கு கூறப்படும் செய்தியினையே தொல்காப்பியர் செய்யுள் இயலில் பா என்னும் உறுப்பில் கூறுகின்றார்.