பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பட்டன. இக்காலத்தே உரைநடை எழுதுவதை விடக் கவி பாடுதல் மிக எளிமையாகக் கருதப்பட்டுச் சொல் முடிவு இல்லாமலும் அசை அமைப்பு சீரமைப்புகளைக் கருதாமலும் தொடையும் தொடை விகற்பமும் அமையாமலும் பாட் டியற்றுவோர் பல்கியுள்ளனர். பாட்டு எவ்வாறு இருப்பினும் அதில் அமைந்துள்ள பொருள் சிறப்பாக அமைவதில்லை. காரணம் என்னையெனின்? பாடுகின்றவன் உள்ளம் துய்மையாக ஒளிபடைத்ததாக இருப்பதில்லை. அதனால் அவனுடைய பாடல் உலகிற்கு நலம் பயப்பதாக அமைவ தில்லை. திருவள்ளுவர், "மனத்துயார்க் கெச்சம் நன்றாகும்" மனம் தூயவர்க்கு எஞ்சிய சொல்லும் செயலும் நன்றாகும் என்று கூறுகிறார். பாரதியார் "உள்ளத்தில் ஒளியுண்டானால் வாக்கினில் ஒளியுண்டாகும், வாக்கினில் ஒளியுண்டாகின் அவ்வாக்கிலிருந்து கவிதை வெள்ளம் பெருக்கெடுத்து ஒடும். அந்நிகழ்ச்சியால் தாழ்ந்த உலகம் உயர்ந்து வாழும் என்று கூறுகின்றார். தீய உள்ளம் படைத்தவர் தமிழ்ப் பாட்டைப் பாடுதல் நன்றன்று என்பதைப் பிற்காலப் புலவர் ஒருவர், சீற்றம் காமம்.அழுக்காறு சிறந்து நிற்க மனத்திற்கண், ஏற்ற பொய்யும் கடுமொழியும் இகழ்ந்து கூறும் தீச்சொல்லும் மாற்ற முரைக்கும் நாவதனில் மண்டிக் கிடக்கும் மாண்பில்தோய் நாற்றம் வீசும் நின்வாயால் நல்ல தமிழைக் கூறாதே என்று பாடியுள்ளதைக் காண்க. சொல்லமைப்பு மாத்திரை வகையால் எழுத்தும், எழுத்தால் அசையும், அசையால் சீரும், சீரால் அடியும், அடியால் பாட்டும் தோன்றும். இலக்கண முறைப்படி அமைந்த இப்பாடலில் நல்ல ஒசையின்பத்தினைக் காணலாகும். அதுபோல், எழுத்தால் தனிமொழியும், தனி மொழிச்சேர்க்கையால் தொடர்மொழியும், பல தொடர்மொழிச் சேர்க்கையால் செய்யுளும் தோன்றுகின்றது. இலக்கண முறைப்படிச் சொல்லமைந்த இப்பாடலில் பொருள் இன்பத்தைக் காணலாகும். செய்யுள் தோன்றுவதற்குச் சொற்கள் கருவியாக