பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 இருத்தலால் அவை செய்யுட்கு உடலுறுப்புப் போன்றவை என்பதை மேற்காட்டிய நன்னூல் நூற்பாவால் உணர்ந் துள்ளோம். "சொற்களை உடலாகவும் உணர்த்தும் பொருளை உயிராகவும் வண்ணங்களை (ஓசையை) உடம்பின் நிறமாக வும் நடையைச் (செய்யுள்நடை செல்வமாகவும் பெற்ற செய்யுளாகிய மனிதனுக்கு அலங்காரமானவை ஆடை அணிகளைப் போன்றன" என்று வீரசோழியம் விளம்புகின்றது. தொல்காப்பியம் இயல்பாகிய சொல்லும் (இயற்சொல்), திரிந்துவரும் சொல்லும், திசைச்சொல்லும், வடசொல்லும் என்று கூறப்படும் அந்நான்கும் செய்யுள் செய்வதற்குரிய சொல்லாகும் என்று கூறுகின்றது. நால்வகைச் சொல்லும் செய்யுள் செய்வதற்குரிய சொல்லாயினும் செய்யுள் செய் வதற்கு இயற்சொல்லே மிகச் சிறந்ததென்பதும் அடுத்துத் திரிசொல்லும் ஆகும் என்பதும், திசைச்சொல்லும் வட சொல்லும் சிறுபான்மை ஆகும் என்பதும் முறைவைப்பால் உய்த்துணரப்படும். தொல்காப்பியம் செய்யுளியலில், மரபே தானும் நாற்சொல் லியலான் யாப்புவழிப் பட்டன்று என்றொரு நூற்பா இருக்கின்றது. இது செய்யுட்குக் கூறிய முப்பது நான்கு உறுப்புள் மரபென்னும் உறுப்பைக் கூறவந்ததாகும். இந்நூற்பாவிற்கு இளம்பூரணர், "குறித்த 1. நன்னூல் - 398 2. உரையுட லாக உயிர்பொரு ளாக உரைத்தவண்ணம் நிரைநிற மாநடை யேசெல வாநின்ற செய்யுட்களாம் தரைமலி மானிடர் தம்மலங் காரங்கள் (வீரசோழியம் - 143) 3. இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே (சொல்லதிகாரம் - 391) 11