பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 இந்நான்கு சொல்லானும் காலந்தோறும் இடந்தோறும் வழங்குகின்ற வழக்கும் செய்யுளும் இடை தெரியாமல் தொடர்புபடுத்தி முறை பிறழாமல் செய்யுள் செய்க" என்பர். அவர் மேலும், "ஒரு காலத்து வழங்கிய சொற் களும் பொருள்களும் அணிகளும் கோலமும் முதலியன ஒரு காலத்து வழங்காதனவுமுள வழங்கும் காலமும் இடமும் பற்றி ஏற்றவாற்றாற் செய்யுள் செய்க என்றவாறு, இனித் தமிழ் நூற்கண் வழுவமைத்தவாறன்றி, ஆரியமும் பிறபாடை மாக்களும் தாம் வேண்டுமாற்றால் தமிழ்ச் செய்யுள் செய்தல் மரபன்று என்றுனர்க" என்பர். வீரசோழியம் என்னும் இலக்கண நூல், "உலக வழக் கோடு பொருந்தியதாயும், வடமொழி எழுத்துடன் பொருந் தாமலிருப்பதாயும், தேர்ந்துணர்பவர்க்கு இனிமையைத் தருவனவாயும், சான்றோரால் தம் செய்யுளுள் எடுத்தாளப் பெற்றுள்ளதாயும், முறையே பொருளைக் கருதியுணரப் படுவதாயும் உள்ளசொற்களே செய்யுளுக்குக் குற்றமற்ற உறுப்பாகும்" என்றும், "நன்முறையில் வழங்கப்படாதன வாயும், தேர்ந்துணர்வார்க்கு இன்பம் செய்யாதனவாயும், வடமொழி எழுத்தொடு பொருந்தியிருப்பனவாயும், சான் றோர் செய்யுளுள் பயிலாதனவாயும், பொருட்டெளிவினைத் தராதனவாயும் உள்ளசொற்கள் செய்யுட்குக் குற்றமுள்ள உறுப்பாகும்" என்று கூறுகின்றது. சொற்றொடர்களைத் தனித்தனி நோக்கப் பொரு ளுடையனவாயிருந்து கூட்டி நோக்கப் பொருளுணர்த் 1. சார்ந்த வழக்கொடு தப்பா வடவெழுத் தைத்தவிர்த்து தேர்ந்துணர் வார்க்கும் இனிமையைத் தந்துசெய்யுட்களினும் நேர்ந்து சொலப்பட் டுயர்ந்தவ ரால்நிர லொருபொருளை ஒர்ந்து கொளப்படும் சொல்குற்ற மற்ற உறுப்பென்பரே (143) 2. நெற்றி வழக்கொடு தேர்ந்துணர் வார்க்கின்பம் செய்யலின்றிப் பற்றி வடநூ லெழுத்துக்க ளோடு பயின்றுரைப்பின் மற்றிவை யில்லென்று வாங்கவும் பட்டுப் பொருள்மருண்டிப் பெற்றி யுடைச்சொல் பழித்த உறுப்பென்று பேசுவரே