பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 தாததாகிய பிரிபொருட் சொற்றொடரும், முன்மொழிந்த சொற் பொருளோடு பின்மொழியும் சொற்றொடர் ஒன்றாமலிருப்பதாகிய மாறுபடு பொருண்மொழியும், முன்னே கூறியவதனையே மீண்டும கூறி அதனால் வேறொரு பொருளைத் தராதாகிய மொழிந்தது மொழிவும், ஒரு பொருளைத் தெளிவாக உணர்த்த வேண்டிய இடத்தில் பலபொருள் தருமாறு கூறும் கவர்படு பொருண்மொழியும் ஆகாத சொற்றொடர்களென்று தண்டியலங்காரம் கூறும். இதுவரை கூறியவையெல்லாம் சொல்லமைப்புப் பற்றிய செய்தியாகும். இனிச் செய்யுட்கு உயிர் என்று கூறும் பொருளமைப்பைப் பற்றி ஆராய்வோம். பொருளமைப்பு செய்யுளுக்குப் பொருள் அமைப்பு உயிராகும் என்னும் செய்தி முன்னரே கூறப்பட்டது. 'பல்வகைத் தாதுவின்' என்னும் நன்னூல் நூற்பாவுரையுள் பொருள் என்றது அகம், புறம் என்று இரண்டு கூறாக இருக்கும் என்பர் சங்கர நமச்சிவாயர். இளம்பூரணர் தொல்காப்பியப் பொருளதிகாரத் தொடக்கத்தே, "பொருள் என்பது யாதோவெனின்? மேலதிகாரத்தே இலக்கணம் கூறப்பட்ட சொல்லால் உணரப்படுவது. அது முதல் கரு உரி என மூவகைப்படும். முதற் பொருளாவது நிலமும் காலமும் என இருவகைப்படும். நிலம் எனவே நிலத்திற்கு முதலாகிய நீரும் நீர்க்கு முதலாகிய தீயும், தீக்கு முதலாகிய காற்றும், காற்றிற்கு முதலாகிய ஆகாயமும் பெறுதும். காலமாவது மாத்திரை முதலாக நாழிகை, யாமம், பொழுது, நாள், பக்கம், திங்கள், இருது, அயனம், யாண்டு, உகம் எனப் பலவகைப்படும். கருப்பொருளாவது இடத்தினும் காலத் தினும் தோற்றும் பொருள். அது தெய்வம் உணா முதலியன. உரிப்பொருள் மக்கட்கு உரிய பொருள். அஃது அகம் புறம் என இருவகைப்படும். அகமாவது புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனவும் கைக்கிளை பெருந்திணை எனவும் ஏழுவகைப்படும். புறமாவது நிரை கோடற் பகுதியாகிய வெட்சியும் பகைவர் மண் மேற் சேறலாகிய வஞ்சியும், எயில் வளைத்தலாகிய மருதமும்,