பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 இருபெரு வேந்தரும் மைந்து கருதி ஒரு களத்துப் பொருத லாகிய தும்பையும், வென்றி வகையாகிய வாகையும் நிலையாமை வாகையாகிய காஞ்சியும் புகழ்ச்சி வாகையாகிய பாடாண் திணையுமென ஏழுவகைப்படும். அஃதற்றாக, அறம், பொருள், இன்பம், வீடு என உலகத்தோரும் சமயத்தோரும் கூறுகின்ற பொருள் யாதனுள் அடங்கும் எனில்? அவையும் உரிப்பொருளினுள் அடங்கும். அஃதற்றாக, இது பொருளதிகாரமாயின் உலகத்துப் பொரு ளெல்லாம் உணர்த்தல் வேண்டுமெனின் அது முதல் கரு உரிப்பொருள் எனத் தொகை நிலையால் அடங்கும்" என்பர். பாக்களில் அமைக்கும் பொருள் அன்றியும், தொல்காப்பியர், செய்யுளியலில், "ஆசிரியம் வஞ்சிவெண்பாக்கலியென நாலியற் றென்ப பாவகை விரியே" என்று நான்கு பாக்களைக் குறிப்பிட்டு, "அந்நிலை மருங் கின் அறுமுதலாகிய, மும்முதற் பொருட்கும் உரிய என்ற" என்னும் நூற்பாவால், அப் பாக்கள் நான்கும் பொதுப்பட நின்றவழி, அறம் பொருள் இன்பம் (வீடு கூறப்படவில்லை) என்னும் மூன்று முதற் பொருட்கும் உரிய என்பர். காமம் எல்லாப் பொருள்கட்கும் முதல் தொல்காப்பியர் பொருளதிகார முகப்பில் அகத்திணையை வைத்து, அவ்வியல் முகப்பில் கைக்கிளையும் ஐந்திணையும் பெருந்திணையும் என அகத்தினை ஏழு வகைப்படும் என்று கூறியுள்ளார். அவற்றுள் கைக்கிளை என்பது, தலைவன் தலைவி என்னும் இருவருள் ஒருவர் மட்டும் அன்பு செய்கின்ற ஒருபாற் காமமாகும். காமம் நுகர்வதற்குரிய பருவம் நிரம்பாத இளமையானவரிடத்தே நிகழும் காமமும் அதன்பாற்படும். ஐந்திணை என்பது தலைவன் தலைவி என்னும் இருபாலாரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்ற அன்புடைக் காமமாகும். காமம் நுகர்வதற்குரிய பருவம் நிரம்பியவரிடத்தே இது நிகழ்வதாம். பெருந்திணை என்பது பொருந்தாக் காமமாகும். இது