பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 நான்காவது உணர்த்தும் முறை உணர்வினில் வல்லவனாகிய புலவன் பொருத்தமான நால்வகைச் சொற்களால் அகப்பொருள் புறப்பொருள் என்னும் இரண்டில் தான் விரும்பிய பொருளை உணர்த்தும் பொழுது அப்பொருளுக்கு இடமான செய்யுளை அணி பெறச் செய்யவேண்டும் என்று பவணந்தியார் பகர்வர். 'அணிபெறச்செய்வன என்றதனால், அணி என்பது உவமை உருவகம் முதலிய அணிகளையும் குறிக்கும். அவற்றையன்றி அவ்வணிகளின் வேறாய்ப் பொருளை உணர்த்துகின்ற முறையினையும் குறிக்கும். உணர்த்தும் முறையும் உயிர் வீரசோழியம், "செய்யுளுக்குச் சிறந்த பொருளே உயிராதலின், அப்பொருளையே தன்மை, உவமை, உருவகம் முதலான அணிகளாகச் சொல்லுக சொல்லும் பொருளும் இளகித் தோன்றாமல், அவை முற்றிய பொழுதே, அச்செய் யுளில் வைத்த உவமை முதலான அணிகள் அணிகளாகத் தோன்றும் அல்லாதபொழுது அணிகளாகத் தோன்றா. என்போலவெனின், மூக்கும் கண்ணும் முதலிய உறுப்புக் குறைந்தாளும் சாகைக்கண் முதலிய உயிர் நோவுகளை உடையானாம் அணிகளால் விளங்காதவாறு போலக் கொள்க" என்று விளம்புகிறது. மேலே கூறியவற்றால், உயிராகிய பொருள் வேறல்ல உணர்த்தும் முறையாகிய அணி வேறல்ல என்பது விளங்கும். அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல் என்னும் திருக்குறளில் வந்துள்ள உவமை, தாழ்ந்தார் அவைக்கண் ஒருவழியும் சொற்களைச் சொல்லற்க என்ற பொருளை நன்கு உணர்த்துகிறது. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும் என்னும் திருக்குறளில் வந்துள்ள உருவகம் சினந்தவர்க்கு விளையும் தீங்கினைக் கூறுகிறது.