பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 குற்றமில் பொருளும் குற்றமுடைப் பொருளும் கேட்பவர்க்கு இன்பத்தைத் தருவனவும், ஒவ்வொரு வரும் கருதும் கருத்திற்கியைந்த பொருளைத் தோற்றுவனவும் சான்றோர் கூறும் குற்றமில்லாதனவும் ஆன பொருள் செய்யுட்கு உயிராம் என்றும், பொருள் அறிவது அரிதென்று போமாறும், குற்றம் சொல்பவனது குற்றத்திற்கும் உரிய தாமாறும் முற்றுப் பொருளாகாமல் குறைப் பொருளாகக் கூறுவனவெல்லாம் பொருட்குற்றம் என்றும் வீரசோழியம் கூறும. குற்றமுடைச் சொல்லாலும் குற்றமுடைப் பொருளாலும் விளைபயன் வீரசோழிய உரையாசிரியர் சொற்குற்றம் அமைந்த பாட்டினைப் பெற்ற தலைமகனுக்கு, சொல் உடலாதலின் உடலுக்கு ஊனமும், பொருட்குற்றம் அமைந்த பாட்டினைப் பெற்ற தலைமகனுக்கு, பொருள் உயிராதலின் உயிர்க்கு ஊனமும் உண்டாகும். அதனால் சொல்குற்றத்தை விடப் பொருட்குற்றம் தவிர்தல் சிறப்பென்றும் கூறுவர். இதுவரை செய்யுளில் வைக்கப்படும் பொருளைப்பற்றி ஆராய்ந்தோம். இனிப் புலவன் செய்யுளிடமாகப் பொருள்களே உணர்த்தும் முறையைப் பற்றி ஆராய்வோம். 1. ஆக்குதல் கேட்டவர்க் கின்பத் தினையன்றி அவ்வவரே போக்குதல் செய்த கருத்திற் பொருளாய்ப் புராதனரால் நீக்குதல் செய்தகுற் றத்தைக் கடத்தல் நெறிமுறையே தாக்குதல் செய்த பொருள்காண் சிறப்புயிர் தாழ்குழலே (146 - வீரசோழியம்) 2. தெரிவான் அரிது பொருளெனப் போதல் சிதைவுசொல்லப் புரிவான் பொருளுக்கு மேறுதல் மற்றும்பொருளுண்பெற்று பரிவா னுடன் சொல்ல வேண்டுதல் என்றிந்தப் பாட்டில் வைத்த விரிவாம் பொருளென்னும் ஆவியின் குற்றம் விளங்கிழையே (147 - வீரசோழியம்)