பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 எழுத்து 1. யாப்பருங்கல விருத்தி எழுதப்படுதலின் எழுத்தே என்று கூறும், 2. எழுத்து என்பது அத்தொழிலை உணர்த்தின் இயற் பெயராம். 'எழுத்தறியத் தீரும் இழிதகைமை யென அத்தொழிற் பொருளை உணர்த்தின் ஆகுபெயராம் என்பர் மயிலைநாதர். (நன்னூல் - 289). 3. எழுதப்படுவது என்னும் பொருட்கள் எழுது என்னும் முதனிலை உரிச்சொல்லின் முன்னர்ச் செயப்படு பொருண்மை உணர்த்தும் ஐகார விகுதி புணர்ந்து"செய்யாய் என்னும் முன்னிலைவினைச் சொல்" என்னும் சூத்திரத்து மொழிந்த பொருளோடொன்ற அவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்தல் என்னும் உத்தியான் அவ்வைகாரம் கெட்டுக் கெட்டவழித் தகரம் இரட்டித்து எழுத்தென முடிந்தது. இவ்வாறன்றி, எழுது என்னும் முதனிலை எழுத்து எனத் தானே திரிந்து நின்றதென்றும் அஃது ஆகுபெயரால் செய்யப்படு பொருளை உணர்த்திற்றென்றும் கூறுவாரும் உளர். அது பொருந்தாது: ஒரு காரணமின்றித் திரிதல் கூடாமையானும் நடவா மடிசி முதலிய முதனிலை எல்லாம் விகுதியோடன்றித் தனித்தியங்க லாற்றாமையானும், இம்முதனிலைகள் உரிச்சொல்லாகில் பெயர்த் தன்மைப் பட்டுழியல்லது ஆகுபெயராதற் கேலாமையானும் என்பது" என்பர் சிவஞான முனிவர் (தொல், முதல் சூத்) 4. எழுத்தென்பது எழுதப்படும் எழுத்துக்களைக் குறிப்பதன்றி ஒவியத்தையும் குறிக்க வரும், இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் (பரிபாடல் - 19 - 53) என்பதால் உணர்க. 5. எழுத்தென்பது ஆகுபெயர் சங்கரநமச்சிவாயர். 6. எழுத்து என்னும் தொழிற்பெயர், அப்பொருளை விட்டுப் பால்பகா1 அஃறிணைப் பொருள் பொதுப்