பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 பெயராம். அப்பொருளைவிட்டு ஒவியம் முதலியன போலன்றி அகரம், னகரம் முதலியன வடிவை உணர்த்தும் சிறப்புப் பெயராய்2, அப்பொருளை விட்டு ஒலியை உணர்த்தும் ஆகுபெயராய்3, அப்பொருளை விட்டு அவ் வொலியின் இலக்கணத்தை உணர்த்தும் இருமடி யாகுபெயராய்4, அப்பொருளை விட்டு அவ்விலக் கனத்தை யுணர்த்தும் நூலினை உணர்த்தும் மும்மடி ஆகுபெயராய், அப்பொருளை விட்டு இங்ங்னம் கூறிற்று எழுத்து, இங்ங்னம் அறிவித்த தெழுத்து எனக் கரும கருத்தாவையும், கருவிக் கருத்தாவையும் உணர்த்தும் நான்மடி ஆகுபெயராய் நின்று பலபொருட் பட்டது காண்க (இலக்கணக் கொத்துரை - வினையியல் - 36) 7. முதலெழுத்து முப்பது என்றும் (தொல்காப்பியர் முதலானவர் கொள்கை) ஆய்தத்தைக் கூட்டி முப்பத் தொன்று (வீரசோழியம், நேமிநாதம் முதலியவற்றின் கொள்கை) என்றும், சார்பெழுத்து மூன்று (தொல்) என்றும், சார்பெழுத்து பத்து (நன்னூல்) என்றும் கருதுகின்றனர். 8. எழுத்து காற்றின் குணமென்றும், ஆகாயத்தின் குணமென்றும், ஒலியனுக்களால் ஆகியதென்றும், சுத்த மாயையின் காரியமென்றும் பலரும் பலவிதமாகக் கருதுவர். எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழு முயிர்க்கு (392) என்பது திருக்குறள். எண் என்று சொல்லுவனவும், மற்றை எழுத்தென்று சொல்லுவனவும் ஆகிய கலைகள் இரண் டனையும் அறிந்தார், வாழ்ந்திருக்கும் உயிர்கட்கெல்லாம் கண் என்று சொல்லுவர் என்பர் பொய்யாமொழியார். திவாகரமும், பிங்கலமும் "எழுத்தும் எண்ணும் கண் னெனப்படும்" என்று கூறுகின்றது. கலக்கென்ற பெயரால் குறிக்கப்படும் எழுத்தும், எண்ணும் மக்கள் உயிர்க்குக் கண்ணாக உள்ளன.