பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 இவ்விரண்டின் எழுத்து' என்பது எழுதுதலாகிய தொழிலை உணர்த்தும் பொழுது இயற்பெயரென்றும், எழுதப்பட்ட தொழிற்பொருளை உணர்த்தும்பொழுது ஆகு பெயர் என்றும் வழங்கப்படும் (நன்னூல் - மயிலைநாதர்). எழுதுதல் பலவகைத் தொழில்களுள் ஒன்றாகும். தெரித்தல், வரிதல், திட்டல், பொறித்தல், வரைதல், கீறல், கிறுக்குதல் என்னும் சொற்கள் எழுதுதல் என்ற பொருளில் வரும் என்பர். 'எழுதப்படுதலின் எழுத்து' என்று யாப்பருங்கல விருத்தியுரை கூறுகிறது. அவ்வெழுத்திற்கு வரி, பொறி, அக்கரம், இரேகை என்ற பெயர்களைப் பிங்கல நிகண்டு கூறுகின்றது. இவற்றுள் வரியும், பொறியும் நல்லதமிழ்ச் சொல். வரித்தல் - எழுதுதல், பொறித்தல் அடையாளம் செய்தல் என்று பொருள் கூறலாம். மிகப் பழைய நிகண்டாகிய திவாகரமும் அதனைப் பின்பற்றிய பிங்கலமும் நன்னூல் மயிலைநாதர் உரையும் வடிவழுத்தென்றும் பெயரெழுத்தென்றும்2 தன்மையெழுத் தென்றும்3. உள்முடிபெழுத்தென்றும் எழுத்தினை நான்கு விதமாகக் கூறுகின்றது. பெயரெழுத்து முடிவெழுத்து வடவெழுத்து தன்மை எழுத்தென எழுத்தின் பெயரியம் பினரே (திவாகரம் - பழையபதிப்பு - பக். 175) வடிவு பெயர் தன்மை முடிவுநான் கெழுத்தே (பிங்கலம் - பழைய பதிப்பு - பக். 306) வடிவுபெயர் தன்மை உண்முடிவு நடைபெறும் நாவலர் நாடிய எழுத்தே (மயிலைநாதர் - உரை - நன். 256). இவற்றுள் நன்மையும் வடிவும் ஆசிரியன்றான் உணரு மெனினும் நமக்கு உணர்த்த வருமையின் ஒழிந்த ஆறுமே இதனான் உணர்கின்றான் என உணர்க என்பர்-இளம்பூரணர் தொல், எழுத். - 1