பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 பிங்கல நிகண்டின் உரை இந்த நான்கினையும், வடிவெழுத்து:- "செவிப்புல ஒலியைக் கண்களுக்குப் புலப்பட எழுதும் எழுத்து" என்றும், மயிலைநாதர் உரை, "கட்புலன் இல்லாக் கடவுளைக் காட்டும், சட்டகம் போலச் செவிப்புல வொலியைக், உட் கொணற் கிருமுரு பாம் முடிவெழுத்தே" என்றும், பெயரெழுத்து:- "வடிவெழுத்து முதலாக வழங்கும் எழுத்துக்களுக்கு இடும் பெயர்" (பிங் - உரை) என்றும், "வடிவு முதன் மும்மையின் வழங்குமெழுத்தில், படுபல பகுதிக் கிடுபெயர் பெயரே" என்றும் (மயிலை - உரை). தன்மை எழுத்து:- "செவிப்புலனாகிய ஒலியெழுத்து" என்றும் (பிங் - உரை), "தானம் முயற்சி தரக்கொளச் செவிப்புலன், ஆயவொலி தன்மை எழுத்தா கும்மே” என்றும், (மயிலைநாதர் - உரை), முடிவெழுத்து:- (பிங் - உரை) தன்மையெழுத்து பெயரெழுத்து வடிவெழுத்து முதலாகவுள்ள எழுத்தினை மனத்தாற் றுணிவது” என்றும் (மயிலை - உரை) "உருவ முதல் மும்மையோ டொன்றிய வியல்பை, மருவவுளந் துணிவது உண்முடி வெழுத்தே" என்றும் கூறும். மேற்கூறிய நான்கினையன்றி, வேறு நான்கெழுத்தினை யாப்பருங்கல விருத்தி உரையும் மயிலைநாதர் உரையும் கூறுகின்றன. இனி எழுத்து நான்கு வகை:- உருவெழுத்தும், உணர்வெழுத்தும், ஒலியெழுத்தும், தன்மையெழுத்துமென: என்னை? "அவற்றுள், உருவே உணர்வே ஒலியே, தன்மை யென, இருவகை எழுத்தும் ஈரிரண்டாகும்" என்றும், (மயிலை - உரை) "உருவே உணர்வே ஒலியே தன்மை எனவி ரெழுத்தும் ஈரிருபகுதியே" என்றும் கூறுகின்றன. உருவெழுத்து யாப்பருங்கல விருத்தியுரை அவற்றுள் உருவெழுத் தாவது எழுதப்படுவது என்னை? "காணப்பட்ட உருவம்