பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 எல்லாம், மாணக் காட்டும் வகைமை நாடி, வழுவில் ஒவியன் கைவினை போல, எழுதப்படுவது உருவெழுத்தாகும்" என்றாராகலின் என்றும் (மயிலை - உரையும்) இந்நூற் பாவினையே எடுத்தாளுகிறது. - உணர்வெழுத்தாவது (யா-வி) கொண்டவோர் குறியாற் கொண்ட அதனை உண்டென் றுணர்வ துணர்வெழுத் தாகும் மயிலைநாதர் உரையும் இந்நூற்பாவினையே கூறும். ஒலியெழுத்தாவது யாப்பருங்கல விருத்தியுரையும் மயிலைநாதர் உரையும், இசைப்படு புள்ளின் எழால் போல செவிப்புல னாவது ஒலியெழுத் தாகும் என்று கூறும். தன்மை எழுத்தாவது யாப்பருங்கல விருத்தியுரையும் மயிலைநாதர் உரையும், முதற்கா ரணமும் துணைக்கா ரனமும் துணைக்கா ரணத்தொடு தொடரிய உணர்வும் அவற்றொடு புணர்ந்த அகத்தெழு வளியின் மிடற்றுப்பிறந் திசைப்பது தன்மை எழுத்தே என்று கூறும். திவாகர நிகண்டாசிரியரும், யாப்பருங்கல விருத்தி யாசிரியரும் கூறும் நால்வகை எழுத்து: வடிவெழுத்தும் உருவெழுத்தும் ஒன்றே கட்புலன் இல்லாக் கடவுளைக் காட்டும் சட்டகம் போலச் செவிப்புல வொலியை உட்கொளற் கிருமுரு பாம்வடி வெழுத்தே காணப் பட்ட உருவம் எல்லாம் மாணக் காட்டும் வகைமை நாடி வழுவில் ஒவியன் கைவினை போல எழுதப் படுவது உருவெழுத் தாகும் - இந்நூற்பாக்களால் வடிவெழுத்தும் உருவெழுத்தும் ஒன்றென்றே கருத வேண்டியுள்ளது.