பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 உணர்வெழுத்தும் உண்முடிவெழுத்தும் ஒன்றே கொண்டவோர் குறியால் கொண்ட வதனை உண்டென் றுணர்வது உணர்வெழுத் தாகும் என்று உணர்வெழுத்தின் இலக்கணத்தினை யாப்பருங்கல விருத்தியுரை கூறுவதும், உருவ முதல் மும்மையோ டொன்றிய வியல்பை மருவவுளம் துணிவது உண்முடி வெழுத்தே என்று உண்முடி வெழுத்தென்ற பெயரால் மயிலைநாதர் உரை கூறுவதும் முடிவெழுத்தென்று பிங்கல நிகண்டின் உரைகூறுவதும் கருத்தால் ஒத்துள்ளன. தன்மை எழுத்து திவாகரம், பிங்கலம், மயிலை உரை கூறும் தன்மை யெழுத்தும் யாப்பருங்கல விருத்தியும் மயிலைநாதர் உரை கூறும் தன்மைஎழுத்தும் ஒன்றாகவே உள்ளன. செவிப்புல னாகிய ஒலியெழுத்துத் தன்மை எழுத்து (பிங்கலம்) முதற்கா ரணமும் துணைக்கா ரணமும் துணைக்கா ரணத்தொடு தொடரிய உணர்வு அவற்றொடு புணர்ந்த அகத்தெழு வளியின் மிடற்றுப்பிறந் திசைப்பது தன்மை எழுத்தே - (மயிலைநாதர் உரையும், யாப்பருங்கல விருத்தியும்) இவை உள்ளோசையாகும். புற ஓசையை ஒலி எழுத்தென்று மயிலைநாதர் உரையும் யாப்பருங்கல விருத்தியும் கூறுகின்றன. பெயரெழுத்து திவாகரம் முதலியன பெயரெழுத்து என்று ஒன்றினைக் கூறும் பிங்கல நிகண்டு உரை வடிவெழுத்து முதலானவை களுக்கு இடும் பெயரே பெயரெழுத்து என்று கூறும். தொல்காப்பியப் பாயிர உரையுள் நச்சினார்க்கினியார் எழுத்தினைப் பற்றிக் கூறும் செய்தி கருதுதற்குரியதாகும். "எழுத்தென்றது யாதனை எனின்? கட்புலனாகா உருவும்,