பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 கட்புலனாகிய வடிவும் உடைத்தாக வேறு வேறு வகுத்துக் கொண்டு, தன்னையே உணர்த்தியும், சொற்கு இயைந்தும் நிற்கும் ஒசையையாம். கடலொலி, சங்கொலி முதலிய ஓசைகள் பொருள் உணர்த்தாமையானும், முற்று, வீளை, இலதை முதலியன பொருளுணர்த்தினவேனும் எழுத்தாகாமையானும் அவை ஈண்டுக் கொள்ளாராயினர். ஈண்டு உருவென்றது மனணுர்வாய் நிற்கும் கருத்துப் பொருள். இது செறிப்பச் சேறலானும், செறிப்ப வருதலானும் இடையறிப்படுதலானும், இன்ப துன்பத்தை ஆக்கலானும், உருவும் வடிவும் கூடிப் பிறத்தலானும், உந்தி முதலாகத் தோன்றி எண்வகை நிலத்தும் பிறந்து, கட்புலனாற் தன்மை யின்றிச் செவிக்கட் சென்று உறும் உறுமையானும் விசும்பிற் பிறந்து இயங்குவதோர் தன்மை உடைமையானும் காற்றின் குணமாவதோர் உருவாம். வன்மை மென்மை இடைமை கோடலானும் உருவேயாயிற்று.இதனைக் காற்றின் குணமே என்றல் இவ்வாசிரியர் கருத்து. இதனை விசும்பின் குணம் என்பாரும் உளர். இவ்வுரு "உருவுருவாகி" எனவும் (எழுத். - 17) "உட்பெறு புள்ளி உருவாகும்மே" எனவும் (எழுத். - 16) காட்சிப் பொருட்கும் சிறுபான்மை வரும். வடிவாவது கட்புலனாகியே நிற்கும். அது வட்டம் சதுரம் முதலிய முப்பத்திரண்டனுள் ஒன்றை உணர்த்தும். மனத்தால் உணரும் நுண்ணுணர்வு இல்லோரும் உணர்தற்கு எழுத்துக்கட்கு வேறு வேறு வடிவங்காட்டி எழுதப்பட்டு நடத்தலில் கட்புலனாகிய வரிவடிவம் உடையவாயின.இதற்கு விதி"உட்பெறு புள்ளி உருவாகும்மே." (எழுத். - 14) என்னும் சூத்திரம் முதலியனவாம். இவற்றாற் பெரும்பான்மை மெய்க்கே வடிவு கூறினார். "எகர ஒகரத் தியற்கையும் அற்றே" (எழுத்.-16) என உயிர்க்கும் சிறுபான்மை வடிவு கூறினார்.