பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 இனித் தன்னை உணர்த்தும் ஒசையாவது தன் பிறப்பையும் மாத்திரையையுமே அறிவித்துத் தன்னைப் பெற நிகழும் ஒசை. சொற்கு இயையும் ஒசையாவது ஒரெழுத்தொருமொழி முதலியவாய் வரும் ஒசை என்பர். இளம்பூரணர் வன்மை மென்மை கூறலின் எழுத்து அருவன்றி உருவாதல் பெறப்பட்டது. உயிர்க்கும் குறுமை நெடுமை கூறலின் உருவென்பதும் பெறுதும் என்பர் (தொல் எழுத். 2O). நன்னூலாசிரியர் மொழிமுதற் காரண மாமனுத் திரளொலி எழுத்து என்பர். இந்நூற்பா உரையில் மயிலைநாதர் "மொழிக்கு முதற் காரணமாகிய பரமானுக்களது இயைபினால் ஆகுவதான ஒலி எழுத்தெனப்படும். ஈண்டு ஒலியெழுத்துச் சிறப்புடைமையின் எடுத்தோதினார். சிறப்புடைப் பொருளைத் தானெடுத்து மொழிதல் என்பது தந்திர வுத்தியாதலின் என்பர். அரசஞ்சண்முகனார் இனி எழுத்தெனப்படுவது யாதோ வெனில்? கண் முதலாய பிறவற்றுக்குப் புலனாகாது செவிப்புலனே யாகும் ஒலிவடிவும், செவி முதலாய பிறவற்றுக்குப் புலனாகாது கண்ணுக்கும் மெய்க்கும் புலனாகும் வரிவடிவம் உடைத்தாய்த் தனித்து நின்றாயினும், சார்ந்து நின்றாயினும் தன்னை யுணர்த்தலுடன், பொருளுணர்த்தும் சொல்லாகவும், அகச் சொல்லுக் குறுப்பாகலுமாகிய இருதன்மையும் ஒருங்கு பெற்றாயினும், அன்றி உறுப்பாக இயைதற்றன்மை யொன்றே பெற்றாயினும் நிற்கும் ஒலியாம்" என்பர். (தொல்காப்பியப் பாயிரவிருத்தி பக்கம் - 170).