பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 கோடு மாய்ந்த காரணத்தால் வேறு பொருளைத் தரும் கவர்ந்த வழிகளையுடைய காடு என்பர். இங்கே கோடு என்பது எழுத்தின் கோட்டையும் குறிக்கலாம். கொம்புச் சுழியையும் குறிக்கலாம். மற்றொரு அகநானூற்றுப் பாட்டில் (297) எழுத்தைப் பற்றி மற்றொரு செய்தி கூறப்பட்டுள்ளது. இயைபு அழகில்லாத பெரும்பல் தாடியையுடைய கடுங்கண் மறவன் தன் அம்பினை நடுகல்லின் மருங்கே நீட்டிக் கொண்ட காரணத்தால் மருங்கு சுருங்கிப் போன அச்சம் முதிர்ந்த அக்கல்லில் பெரிய பொருள் தோன்றுமாறு செதுக்கிய எழுத்துக்கள் பொருளைத் தரும் இயைபுடன் படிக்க முடியாமையால் அங்குவந்த வம்பலர் பலமுறை முயன்று முயன்று படிக்கத் தொடங்கிப் படிக்க முடியாமல் விட்டுக் கழியும் சுரம் என்று கூறுகிறது. இதனால் ஒரு சொல்லுடன் ஒரு சொல் சேர்வதற்குத் தகுதி வேண்டுதல் போல ஒரெழுத்துடன் மற்றொரு எழுத்துக் கூடிப் பொருள் தருவதற்கு இயைபு வேண்டும் என்று தெரிகின்றது. தொல்காப்பியர் கூறும் எழுத்து தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என்று இலக்கணத்தை மூன்று கூறாக்கி மொழிகின்றார். அம்மூன்றுள் எழுத்திலக்கணத்தினை எழுத்ததிகாரத்தே இயம்பியுள்ளார். தொல்காப்பியர் எழுத்திலக்கணத்தினை இத்தனை என்று கூறவில்லை. இளம்பூரணர் முதலியோர் எட்டுவகையாலும் எட்டிறந்த பல்வகையாலும் எழுத் திலக்கணம் இயம்பப்பட்டுள்ளதென்பர். அவிநயனார் எழுத் திலக்கணத்தினை ஏழுவகையால் இயம்பியுள்ளார் என்று நேமிநாத உரையாசிரியர் கூறுவர். நன்னூல் ஆசிரியர் பன்னிரண்டு பகுதியாகக் கூறுவர். எழுத்தால் ஒரெழுத்தொருமொழி ஈரெழுத்தொருமொழி தொடர்மொழி என மூன்று மொழியாதலையும், மொழிகள் நிலைமொழி வருமொழியாய் நின்று, நிலைமொழி