பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 ஈற்றெழுத்தும் வருமொழி முதல் எழுத்தும் புணர்தலையும், தொல்காப்பியர் எழுத்திலக்கணமாகவே ஒதுகின்றார். அவர் எல்லா வகை எழுத்துக்களையும் எழுத்து' என்ற பொதுப்பெயராலேயே குறிப்பிடுகின்றார். எழுத்துக் களைச் சார்ந்து வராத எழுத்தென்றும் சார்ந்துவரும் எழுத்தென்றும் இரண்டு வகையாக அவர் பிரித்துள்ளார். சார்ந்து வராத எழுத்தைப் பிற்காலத்தார் முதலெழுத் தென்ற பெயரால் வழங்குவர். சார்ந்து வராத எழுத்து முப்பதென்றும் அவை அகரமுதலாகிய முப்பது னகர இறுவாயாகிய முப்பது என்று பெயர் பெறும் என்றும் கூறுவர். அம்முப்பதுள் ஒளகார இறுவாய்ப் பன்னிரண்டும் உயிர் என்றும், அப் பன்னிரண்டுள் அ, ஈ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் ஒரள பிசைக்கும் குற்றெழுத்தென்றும் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஒள என்னும் ஏழும் ஈரளபிசைக்கும் நெட்டெழுத்தென்றும் மேற்கூறிய முப்பதுள் னகார இறுவாயாகிய பதினெட்டும் மெய் எனப் பெயர் பெறும் என்றும் பதினெட்டுள் க, ச, ட, த, ப, ற ஆறும் வல்லினமென்றும் ங்ளுணநமன ஆறும் மெல்லினமென்றும், யரலவழள ஆறும் இடையினமென்றும் பெயர் பெறும் என்பர். தொல்காப்பியர் உயிரளபெடையை அளபெடை என்றே வழங்குவர். ஒற்றளபெடுப்பதை மட்டும் ஒற்றளபெடை என்பர். பிறரெல்லாம் மெய்யும் உயிரும் கூடி ஒலிக்கும் உயிர்மெய் எழுத்தின் இலக்கணத்தைச் சார்பெழுத்துள் வைத்து ஒதியிருந்தாலும் தொல்காப்பியர் அவ்வாறு ஒத வில்லை. உயிர்மெய் எழுத்தின் இலக்கணத்தைச் சார்பல்லா எழுத்துக்களின் இலக்கணத்தைக் கூறும் நூன்மரபின்கண் 'புள்ளியில்லா (தொல்.எழு. 17) என்னும் நூற்பாவால் ஒது கின்றார். ஆனால், உயிர்மெய்யெழுத்து என்ற பெயரால் கூற வில்லை. இங்கே கூறாவிடினும் புணரியலில் "உயிர்மெய்யீறும் உயிரீற் றியற்றே" என்ற நூற்பாவில் உயிர்மெய் என்று பெயர் கூறுகின்றார்.