பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 இகரமேயன்றி யகரமாகிய புள்ளியும் ஐயெனப்பட்ட நெட்டெழுத்தின் வடிவுபெறத் தோன்றும்" என்றும், இந்நூற்பாவுள் மெய்பெற என்ற இலேசான், "அகரத்தின் பின்னர் யகரமேயன்றி வகரப் புள்ளியும் ஒளகாரம் போல வரும் எனக் கொள்க’ என்றும், இகரவீற்று மொழிக்கண்ணே யகரமும், அதுபோல இகரமும் விரவிவரும்; இதுவும் ஓர் போலி எழுத்தென்றும்," என்றும் உரைகூறி, முறையே அஇவனம், ஐவனம் எனக் கொள்க; அஉவை, ஒளவை எனக் கண்டு கொள்க; ஒளவை, அவ்வை எனக் கண்டு கொள்க; நாய் நாஇ எனக் கண்டு கொள்க என்று எடுத்துக் காட்டுக் கூறுவர். நச்சினார்க்கினியரும் மேற்கண்ட நூற்பாக்களுக்கு இவ்வாறே உரைகூறுவர். சந்தியக்கரம் ஆனால், சிவஞானமுனிவர் தொல்காப்பிய முதற் சூத்திரவிருத்தியுள் "இனி எகரமாவது அகரக் கூறும் தம்முள் ஒத்திசைத்து நரமடங்கல் போல் நிற்பதொன்றாகலானும், ஒகரமாவது அகரக்கூறும் உரைக்கூறும் தம்முள் ஒத்திசைத்து அவ்வாறு நிற்பதொன்றாகலானும், அவை அவற்றின் பின்னர் முறையே வைக்கப்பட்டன. அகரமும் யகரமும் இகரமும் தம்முள் ஒத்திசைத்து நிற்பதொன்றாகலின், எகர, ஏகாரங் களின் பின்னர் ஐகாரமும், அகரமும் வகரமும் உகரமும் தம்முள் ஒத்திசைத்து நிற்பதொன்றாகலின், ஒகர ஒகாரங் களின் பின்னர் ஒளகாரமும் வைக்கப்பட்டன. இவ்வாறாதல் பற்றி ஏ, ஒ, ஐ, ஒள என்னும் நான்கினையும் மடங்கல் போல என்று உவமையும் கூறினார். இக்கருத்தே பற்றித் தொல்காப்பியர் "அகர இகரம் ஐகாரம் ஆகும்", "அகர வுகரம் ஒளகாரம் ஆகும்" எனக் கூறி, ஐ என்னும் நெட்டெழுத்தின் வடிவு புலப்படுத்தற்கு அகர இகரங்களே யன்றி அவற்றிடையே யகரமும் ஒத்திசைக்கும் என்பார். "அகரத் திம்பர் யகரப் புள்ளியும் ஐயென் நெடுஞ்சிை மெய்பெறத் தோன்றும்" என்றும், மெய்பெற என்ற இலேசானே ஒளவென்னும் நெட்டெழுத்து வடிவு புலப் படுத்தி அதற்கு அகர உகரங்களே யன்றி அவற்றிடையே