பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 வடிவின்றி நிற்றலின் உயிராயிற்று. பன்னிருயிர்க்கும் தான் இடங்கொடுத்து அவற்றான் இயங்கும் தன்மை பெற்ற உடம்பாய் நிற்றலின் மெய்யாயிற்று என்று உயிர், மெய் என்ற பெயர்க்குக் காரணங்கூறி இவை காரணப் பெயரே என்று கூறின்ர் (தொல், எழுத் 8, 9). சங்கரநமச்சிவாயரும் ஆவியும், மெய்யும் போறலின் இவ்விருவகை எழுத்திற்கும் ஆவி மெய் என்பன உவம ஆகுபெயராய்க் காரணப் பொதுப் பெயராயின என்பர் (நன்னூல் 63). அளபெடை தமிழ் நூலார் இசைவிளி பண்ட மாற்றாதியில் வருவனவற்றை இயற்கையளபெடை என்றும், "கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர், படாஅ முலைமேற் றுகில்" எனக் காரிய முன்வழிவரும் அசை ஆகும் நிலையில் உள்ள அளபெடையைச் செயற்கை அளபெடை என்றும், உவாஅப்பதினான்கு இராஅப் பகல் என்னும் எழுத்துப் பேறுகள் குன்றிசை மொழி வயின் நின்றஇசை நிறைப் பனவற்றைப் புலுதசந்தி (அளபெடைப் புணர்ச்சி) என்றும் பிரயோக விவேக நூலார் கூறுவர். எழுத்துப்போலி தொல்காப்பியத்துள், அகரம் இகரம் ஐகாரம் ஆகும் (54) அகரம் உகரம் ஒளகாரம் ஆகும் (SS) அகரத் திம்பர் யகரப் புள்ளியும் ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் (56) இகரம் யகரம் இறுதி விரவும் (58) என்னும் நூற்பாக்களுக்கு இளம்பூரணர் போலி எழுத்து ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று என்று கருத்துக்கூறி "அகரமும் இகரமும் கூட்டிச் சொல்ல ஐகாரம் போல ஆகும்" என்றும், "அகரமும் உகரமும் கூட்டிச் சொல்ல ஒளகாரம் போல ஆகும்" என்றும், "அகரத்தின் பின்னர்