பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 'அறிந்த எழுத்தாம் முன் பன்னிரண் டாவிகள் ஆனகம்முன், பிரிந்த பதினெட்டு மெய்: நடு ஆய்தம்" என்றும் (வீரசோழியம் 1) "ஆவி அகர முதல் ஆறிரண்டாம் ஆய்தமிடை மேவுங் ககரமுதன் மெய்களாம் - மூவாறும் கண்ணும் முறைமையாற் காட்டியமுப் பத்தொன்று நண்ணுமுதல் வைப்பாகும் நன்று" (நேமிநாதம் 1) என்பனவற்றால் அறிக. ஆத்திச்சூடியில் ஒளவியம் பேசேல் என்பதன் பின் அஃகம் சுருக்கேல் என்று வருவதையும் திருநாவுக்கரசர் தேவாரத்துள் சித்தத்தொகையுள் ஒளகாரத்தின் பின் ஆய்தம் கூறப்பட்டிருத்தலையும் கருதினால் முதலெழுத்து முப்பத் தொன்று என்று பிற்காலத்தார் கருதினர் என்னும் செய்தி புலப்படும். பிற்காலத்தார் ககரம் முதலானவற்றை க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கெள என்று கூறி ஈற்றில் க் என்ற மெய்யெழுத்தைச் சொல்லுதல் போல், அகரம் முதலானவற்றை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்று கூறி ஈற்றில் ஃ என்று ஆய்தத்தைக் கூறும் வழக்கத்தையுடையவராக இருந்தனர். எழுத்துக்களின் பெயர் மயிலைநாதர் ஆவி, உயிர், மெய், உடம்பு என்பன இடுகுறிப் பொதுப்பெயர். அ, ஈ, க, ங் என்றற் றொடக் கத்தன இடுகுறிச் சிறப்புப்பெயர். குறில், நெடில், வல்லினம் மெல்லினம் இடையினம் என்றற்றொடக்கத்தன காரணப் பொதுப்பெயர். குற்றிகரம், குற்றுகரம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என்றற்றொடக்கத்தன காரணச் சிறப்புப் பெயர். இவ்வாறே பிறவும் ஆராய்ந்தறிக" என்பர். ஆனால் நச்சினார்க்கினியர் ஒளகார இறுவாய்ப் பன்னிரண்டெழுத்தினையும் உயிர் என்றதும், ணகார இறுவாய்ப் பதினெண்ணெழுத்தினையும் மெய் என்று வழங்குவதும் ஆட்சியும் காரணமும் ந்ோக்கிய குறி என்று கூறி, மெய் பதினெட்டினையும் இயக்கித் தான் அருவாய்