பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 முதலெழுத்து முப்பதுள் ஐகாரத்திற்கு இகரமும் ஒளகாரத்திற்கு உகரமும் இனமாகப் பொருந்த மற்றவை இரண்டிரண்டு ஓரினமாய் வரும் என்பர். நன்னூலார் கூறும் சார்பெழுத்து தொல்காப்பியர் சார்பெழுத்து மூன்று என்றனர். நன்னூலாசிரியர் சார்பெழுத்துப் பத்து என்றனர் (நன். 59). உயிர்மெய்யும் ஆய்தமும் உயிரளபெடையும் ஒற்றள பெடையும் குற்றியலிகரம் குற்றியலுகரம் ஐகாரக் குறுக்கமும் ஒளகாரக் குறுக்கமும் மகரக் குறுக்கமும் ஆய்தக் குறுக்கமும் என்னும் இருபதும் சார்பெழுத்து என்றனர். இந்நூற்பாவுரையில் மயிலைநாதர் "என்னை? எழுத்தெனப்படுப, அகர முதல் னகர விறுவாய் முப்பஃ தென்ப, சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே" (தொல், நூன். 1) என ஆசிரியர் தொல்காப்பியனாரும் இவ்வாறு முதல்சார்பென வகுத்துக் கொண்டாரென்க. அஃதே, அவர் சார்பெழுத்தென மூன்றே கொண்டாராலோவெனின் அஃதே, ஒன்று சொன்னாய் ஒழிந்தவை எப்பாற்படும் என்றார்க்கு மூன்றாவதோர் பகுதி சொல்லலாவதின்மை யானும் முதலெழுத்தாந்தன்மை அவற்றிற் கின்மையானும் சார்பிற் றோன்றுதலானும் இப்பத்தும் சார்பாகவே கொள்ளப்படும் என்பது" என்பர். முதல் சார்பு என்ற காரணம் மயிலைநாதர் தாமே தனித்து நிற்கையில் முதலெழுத் தென்றாயின. அவையே தம்மோடு தாம் சார்ந்தும் இடம் சார்ந்தும் இடமும் பற்றுக்கோடும் சார்ந்தும் விகாரத்தால் வருதலிற் சார்பெழுத்தென்றாயினவெனக் கொள்க (நன். 66) GTI ČITI I ПГ. முதலெழுத்து முப்பத்தொன்று தொல்காப்பியர் "அகரமுதல் னகரவிறுவாய் முப்பஃ தென்ப" என்று சார்பல்லாத முதலெழுத்தை முப்பது என்பர். வீரசோழியமும், நேமிநாதமும் சார்பெழுத்தாகிய ஆய்தத்தை முதலெழுத்துள் ஒளகாரத்தின் பின் வைத்து முதலெழுத்து முப்பத்தொன்று என்று கூறும்,