பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 ஒளவிய நெஞ்சத்தா னாக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் இவை போல் வரும் செய்யுளெல்லாம் மோனைத் தொடை யொடும் எதுகைத் தொடையொடும் மாறுபட்டு இலக்கண வழுவாதல் காண்க. வடநூலார் இவ்விலக்கணத்தை (போலியெழுத்தினைப்) பற்றிய இலக்கணத்தைத் தள்ளாது சமானாக்கரம் என்று பெயரிட்டு இவ்விரண்டனையுந் தழுவினார். அது பற்றித் தமிழ் நூலார் இணையெழுத்தென்று மொழிபெயர்க்க மறந்து போலி எழுத்தென்று மொழி பெயர்த்ததனால் (நன்னூலாரா) போலிச்சரக்கு போலியிலக்கணம்,போலியுரை என்னும் சொற்களைப் போல இதனையும் கரு முன்னும் பின்னும் பாராது தள்ளினார் (யார்) அதுபற்றிப் போலி யெழுத்தைப் போற்றுதல் கடனே' எனச் சூத்திரம் செய்தோம் என்பர். "சார்பிற் றோன்றும் தன்மைய என்று மிகுத்துச் சொல்லிய அதனால், அகரத்தோடு யகர ஒற்று வந்தும், ஆய்தம் வந்தும் ஐகாரத்தின் பயத்தவாம். அகரத்தோடு உகரம் வந்தும், வகரவொற்று ஒளகாரத்தின் பயத்தவாம். என்னை? ஆய்தமும் யவ்வும் அவ்வொடு வரினே ஐயென் எழுத்தொடு மெய்பெறத் தோன்றும் உவ்வொடு வவ்வரின் ஒளவியலாகும் என்றார் அவிநயனார். வரலாறு அய்யன், கய்தை, தய்யல், மய்யல், கய்யன் என, அகரத்தோடு யகரவொற்று வந்து? ஐயன், கைதை, தையல், மையல், கையன் என்னும் ஐகாரத்தின் பயத்தவாயின. கஃசு, கஃதம், கஃசம் என அகரத்தோடு ஆய்தம் வந்து, கைசர், கைதம், கைசம் என்னும் ஐகாரத்தின் பயத்த வாயினவாறு. அவ்வை, நவ்வி, அ.உவை, நஉலி என அகரத்தோடு வகரவொற்றும், உகரமும் வந்து, ஒளவை, நெளவி என்னும் ஒளகாரத்தின் பயத்தவாயினவாறு என்பர்,