பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 எழுத்துக்களைப் பலவாகக் கூறினும் மூன்றாய் அடங்கும் எழுத்துக்களை உயிர், மெய், உயிர்மெய், குறில், நெடில், அளபெடை, வன்மை, மென்மை இடைமை சார்பில் தோன்றுவன. ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம் பதினைந்து வகையாகக் கூறினும் அவையெல்லாம் உயிரும் ஒற்றும் உயிர் மெய்யுமென மூன்றில் அடங்கும் என்பர் (யாப்.வி.பக்.30) யாப்பருங்கலமும் யா. காரிகையும் எழுத்துக்களைக் கூறுவதில் மாறுபாடு இளம்பூரணர் தொல், செய்யுளியலில் செய்யுட்கு உறுப்பாம் எழுத்துக்களைக் கூறும்பொழுது "எழுத்திய லாவது- உயிரெழுத்து, மெய்யெழுத்து, சார்பெழுத்தென மூவகைப்படும். மேற்கூறிய உயிரெழுத்து குற்றெழுத்து, நெட்டெழுத்து, அளபெடை மூவகையாம், மெய்யெழுத்து வல்லினம், மெல்லினம், இடையினம் என மூவகைப்படும். சார்பெழுத்து குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தமென மூவகைப்படும், மெய்யினும் சிலவும் ஆய்தமும் அளபெடுக்கப்படும் என்றனர். எனவே இளம்பூரணர் எழுத்து' என்ற மூன்றாக வகைப் படுத்தி ஒவ்வொன்றையும் மூன்றாக விரித்து ஒன்பது விரி யாக்கி அவற்றுடன் ஒற்றளபெடையும் ஆய்த அளபெடையும் கூட்டிச் செய்யுட்கு வருவன பதினொன்று என்பர். பேராசிரியர் ஈண்டுப் (செய்யுளியலில்) பதினைந்து எழுத்தென்று கூறிப் பயங்கோடுமாயினும் ஆண்டை முப்பத்து மூன்றெழுத்தின் வேறுபடப் பிறந்தன. சிலவெழுத்து மல்ல வென்பான் மேற்கிளந்தன்ன என்றான் என்பது. மற்று எழுத்தியல் வகையினை மேற்கிளந்தன்ன (தொல். செய் - 2) என்ற மாட்டேற்றான் முப்பத்து மூன்றெனக் கொள்வதன்றிப் பதினைந்தெனக் கொண்டு மாறென்னை யெனின், எழுத்தோத்தினுள் குறிலும் நெடிலும், உயிரும், மெய்யும், இனம் மூன்றும் சார்பெழுத்து மூன்றும் எனப் பத்தும் இயல்புவகையான் ஆண்டுப் பகுத்தோதினான். உயிர்