பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 சார்பில் தோன்றும் தன்மைய என்றா ஐஒள மகரக் குறுக்கம் என்றா ஐம்மு வெழுத்தும் ஆம்அடைக் குறுப்பே 2) உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் உயிர்மெய்எழுத்தும் உயிரெழுத்தின் வகையாகிய குறிலும் நெடிலும் உயிரெழுத்து மெய்யெழுத்தால் வரும் உயிரளபெடை ஒற்றளபெடை என்னும் அளபெடையும், வல்லெழுத்தும் மெல்லெழுத்தும், இடையெழுத்தும், குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் மூன்று சார்பெழுத்தும், ஐகாரக் குறுக்கம், ஒளகாரக்குறுக்கும் மகரக் குறுக்கம் என்னும் பதினைந்தும் அசைக்கு உறுப்பாம் என்பர். யா.க. விருத்தியாசிரியர் எழுத்தெல்லாம் ஒற்றும் உயிரும் உயிர்மெய்யுமென மூன்றாய் அடங்குவனவற்றை இவ்வாறு விகற்பித்துச் சொல்லியது. எழுத்துக்களது பெயர் வேறு பாடுகள் எல்லாம் அறிவித்தற்கும், அப்பெயரால் பெயராக்கி ஆளுதற்கும் எனக் கொள்க என்றனர். பெரியபம்மம் என்னும் இலக்கண நூலும் உயிர் உறுப்பு உயிர்மெய் தனிநிலையெனாக் குறில் நெடில் அளபெடை மூவினம் எனாஅ அஃகிய நாலுயிர் மஃகான் குறுக்கமொடு ஐந்துதலை யிட்ட ஐயீ ரெழுத்தும் அசைசீர் தளை தொடைக் காகும் உறுப்பென வசையறு புலவர் வகுத்துரைத் தனரே என்று கூறும். யாப்பருங்கலக் காரிகை குறிலும், நெடிலும், ஆவியும் குறுகிய மூவுயிரும், ஆய்தமும், மெய்யும் மூவினமும் உயிர்மெய்யும், அளபெடையும் ஆகிய இவை அசைக்கு உறுப்பாம் என்கின்றது.