பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 காக்கைப்பாடினியார் காக்கைப் பாடினியாரும் குறில் நெடில், அளபெடை, உயிர், உறுப்பு, உயிர்மெய் வலிய மெலிய இடைமையோடு ஆய்தம் இஉஐ என்னும்மூன்று குறுக்கமோடு பதின்மூன்றும் அசைக்குறுப்பாம் என்பர். காரிகை உரையாசிரியர் அறிஞர் உரைத்த அளபும் என்ற விதப்பினால் எழுத்திற்கு மாத்திரை கொள்ள வேண்டும் என்று கூறிக் குற்றெழுத்து ஒரு மாத்திரை நெட்டெழுத்து இரண்டு மாத்திரை, உயிரளபெடை மூன்று மாத்திரை, ஆய்தமும் மெய்யும் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஒரோவொன்று அரைமாத்திரை ஐகாரக் குறுக்கமும் ஒளகாரக் குறுக்கமும் ஒரோவென்று ஒன்றரை மாத்திரை, ஒற்றளபெடை ஒரு மாத்திரை, ஆய்தக் குறுக்கமும். மகரக் குறுக்கமும் ஒரோவென்று கால் மாத்திரை எனக் கொள்க" என்பர், இங்கே இவர் ஆய்தக் குறுக்கத்தைக் கூறுகிறார். சிறுகாக்கைப் பாடினியார், குறிய நெடிய உயிர் உறுப்பு உயிர்மெய் வலிய மெலிய இடைமையோடு அளபெடை மூவுயிர்க் குறுக்கமும் ஆம்அசைக் கெழுத்தே என்பர். அவிநயனாரும், நெடிய குறிய உயிர்மெய் உயிரும் வலிய மெலிய இடைமை அளபெடை மூவுயிர்க் குறுக்கமோடு ஆம்அசைக் கெழுத்தே என்பர். இளம்பூரணரிலிருந்து பல ஆசிரியர்களும் செய்யுட்குப் பயன்படும் எழுத்துக்களை, 10,15,16,13,12, 11 என்று கூறுகின்றனர். இவையெல்லாம் தொல்காப்பியர் கூறும் உயிர், மெய் சார்பெழுத்து என்னும் மூன்றுவகை எழுத்துக்களிலிருந்து பிரிந்தவையேயாகும்.