பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 ஆய்தக் குறுக்கம் இவற்றில் இடம்பெறவில்லை. காரிகை உரையாசிரியர் மட்டும் குறிப்பிடுகின்றார். நேமிநாதம் 'காலாம் குறுகுமங்கு ஆய்தம் என்று மகரக் குறுக்கத்திற்கும் ஆய்தக் குறுக்கத்திற்கும் கால் மாத்திரை என்று கூறும். (நேமி.5) யா, காரிகை உரையாசிரியர் ஆய்தக் குறுக்கத்திற்கு மாத்திரை கூறுகிறார். ஆய்தக் குறுக்கம் இவ்வாறு வரும் என்பதை அவர் கூறவில்லை. நேமிநாதம் ஆய்தக் குறுக்கத் திற்குக் கால் மாத்திரை என்று கூறுகிறது. ஆனால் ஆய்தக் குறுக்கம் இவ்வாறுவரும் என்று கூறவில்லை. நேமிநாதம் 17ஆம் நூற்பாவில் (எழுத்ததிகாரம்) உரையில் 'உண்டு என்று மிகையால், தனிக்குற்றெழுத்தின் கீழ் ளகார லகாரங்கள் நிற்க ஒற்றழியில் இடையே ஆய்தமும் புகுந்து முடியும் அவை ஆய்தக் குறுக்கமென உணர்க. வரலாறு முள், கல் என நிறுத்தித் தீது என வருவித்து முஃடீது, கஃறீது எனவும், அல், பல் நிறுத்தித் திணை, தொடை என வருவித்து அஃறிணை, பஃறொடை எனவும் முடிக்க" என்பர் அதன் உரையாசிரியர். நன்னூலாசிரியர் அஃகிய தனிநிலை (59) என்று ஆய்தக் குறுக்கத்தைக் கூறி, "ஆய்தம் இரண்டொடு" (60) என்று, அவ்வாய்தக் குறுக்கம் இரண்டு என்று குறிப்பிட்டு, "பனவிற் றியைபினாம் ஆய்தம் அங்கும்" (96) என்று ஆய்தக் குறுக்கும் வருமாற்றையும் அதுகால் மாத்திரையளவாய் வரும் என்பதை "கால்குறள் மக்கான் ஆய்த மாத்திரை" (99) என்ற நூற்பாவால் கூறியுள்ளார். தொல்காப்பியர் குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்னும் மூன்றையும் சார்பெழுத்தென்றதன்றி ஆய்தம் குறுகி மற்றொரு சார்பெழுத்தாகும் என்று கூறவில்லை.