பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 சார்பெழுத்து மூன்றேயன்றிப் ஏனைய சார்பெழுத்தல்ல என்பர் சிவஞானமுனிவர் இனிச், "சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே" (தொல் நூன் - 1) எனவும், "சார்ந்து வரின் அல்லது தமக்கியல்பிலவெனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் (தொல், பிற -19) எனவும் வரையறுத்து ஒதியவாறே சார் பெழுத்து மூன்று என்னாது சில உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் உடன்சேர்த்து எண்ணுதலும், மரபுநிலை திரிதலின், வழிநூல் சார்புநூல் ஆதற்கு ஏலாவாய் இழுக்கப்படும் என்பது என்பர் சிவஞான முனிவர் (தொல், பாயிர விருத்தி) அம்முனிவரே பிறிதோரிடத்தில், இனி இம் மூன்றுமே யன்றி உயிர்மெய் முதலியவற்றையும் சார்பெழுத்தென்பாரும் உளராலோவெனில்; 'ஆல்' என்பழி உயிர் முன்னும் மெய் பின்னும் நின்று மயங்கினாற் போலவே லா என்புழியும் மெய்பின்னும் உயிர் பின்னும் நின்று மயங்கினவேயல்லது உயிரும் மெய்யுமாகிய தந்தன்மை திரிந்து வேறாகாமைக்கு "மெய்யோ டியையினும்உயிரியல் திரியா" என்றற் றொடக்கத்துச் சூத்திரங்களே சான்றாகலின், உயிர் மெய் யாகிய காலத்தும் குறின்மை, நெடின்மை என்னும் உயிர்த் தன்மையும், வன்மை, மென்மை, இடைமை என்னும் மெய்த்தன்மையும் தம்மியல்பில் திரிவுபடாமையானும், உடன்மேல் உயிர்வந் தொன்றுதல் பொன்மணி போல இயல்பு புணர்ச்சியே யாமென்ப ஆகலானும்,ஒற்றுமை யதான் உயிர்மெய் என்பதனைத் தகர ஞாழல் போல உம்மைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை என்பார்க்குத் தகரமும் ஞாழலும் கூடிய சாந்து பின்னர்த்தகரமும் ஞாழலும் ஆகாதவாறு போல, மெய்யுயிர் நீங்கில் தன்னுருவாதல் பொருந்தாமையாலும், 'துணங்கை' 1. கூறுபவர் நன்னூலாசிரியர். உயிர்மெய் யாய்தம் உயிரள பொற்றளபு அஃகிய இ.உ.ஐ.ஒள மஃகான் தனிநிலை பத்தும் சார்பெழுத்தாகும் (59). 13