பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 என்பது மெய்ம்முதல், உயிரீறு, மெய்ம்மயக்கமெனவும், வரகு என்பது உயிர்த்தொடர் மொழிக்குற்றியலுகர மெனவும் கொள்வதன்றி உயிர் மெய்முதல், உயிர் மெய்யீறு, உயிர்மெய்மய்க்கம், உயிர்மெய்த் தொடர்மொழிக் குற்றியலு கரமெனக் கொள்ளாமையின் ஒற்றுமை நயம் பற்றி ஒன்று என்பதனால் ஒருபயன் இன்மையாலும், மெய்களெல்லாம் உயிர்வந்தொன்றாது தனித்து நின்றவழியே மாத்திரை கொள்ளவும் எழுத்தெண்ணவும் படுமென்பது அவற்றியல் பாகலின், அதுபற்றி ஒன்றெனல் வேண்டாமையானும், அவ்வியல்பறிந்து கோடற்குத் தனித்து நின்ற மெய்யை ஒன்றெனவும், புள்ளியெனவும் உயிரொடு கூடிய மெய்யை உயிர்மெய்யெனவும் சிறப்புப் பெயரிட்டாராதல் ஆசிரியர் கருத்தாகலானும் உயிரோடு கூடியவிடத்து வரிவடிவு வேறுபடுதலின் அதுபற்றி "புள்ளியில்லா எல்லா மெய்யும்" என மெய்மேல் வைத்துச் சூத்திரம் செய்து வடிவெழுத் திலக்கணங்கூறினாரன்றி, ஒலியெழுத்திலக்கணம் வேறுபடக் கூறாமையானும், அளபெடை சார்பெழுத்தென வேறாகாமை முன்னர்க் காட்டப்பட்டதாகலானும், ஐகாரக் குறுக்கம் முதலியன ஒருகாரணம் பற்றிக் குறுகினவாகலிற் சிறுமரம் பெருத்துழியும் பெருமரம் சிறுத்துழியும் வேறொருமரம் ஆகாதவாறு போலவேறெழுத் தெனப்படாவாகலானும், வடநூலாரும் வடவெழுத்துள் உயிரெழுத்தின் இறுதிக்கண் வைத்த இரண்டும் ஒற்றெழுத்தின் இறுதிக்கண் வைத்த இரண்டுமாகிய நான்கெழுத்தும், வல்லெழுத்தின் முன் மெல்லெழுத்து வந்து மயங்குழி அவ்வவ் வல்லெழுத்தோடொப்ப இடையே தோன்று மெனப்பட்ட வியம எழுத்தும் என்னும் இவை மாத்திரையே சார்பெழுத்தென வேறுகோடலன்றி, உயிர் மெய், உயிரள பெடை ஐகாரக் குறுக்கம் முதலிய எழுத்துக்களைச் சிறிது திருந்தமைபற்றி வேறெழுத்தென யாண்டும் கொள்ளாமை யானும் அது பொருந்தாதென மறுக்க வன்றொடர் மொழிக் குற்றியலுகரம் வல்லெழுத்து வருவழிக் கான் மாத்திரையாய்க் குறுகலின், அது பற்றி