பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T89 அதனைக் குற்றியலுகரத்தின் வேறு என்னாமையின், அவர்க் கும் (தொல்காப்பியர்க்கும்) அது கருத்தன்று போலும் என்க. (இவ்வாறு எழுதுவது ஆய்தக் குறுக்கத்தைக் கருதி போலும்) இன்னும் அவர் ஐகாரம் மொழிமுதற்கண்ணும் குறுகு மெனவும், கை, மை முதலியனவும் பொருளைச் சுட்டியவழிக் குறுகுமெனவும் கூறினார். இடையன், மடையன், தினை, பனை என்றவழிக் குறுகுதல் போல, "வைகலும் வைகல் வரக்கண்டும்" என்புழி ஐகாரம் முதற்கட் குறுகாமை செவி கருவியாக உணரப் படுதலானும், அன்றியும் வைகலும் வைகல் என்புழிக் குறுகுமாயின் வைகலென்பதனை குறி வினை ஒன்றென்று அசை கொள்ள வேண்டும் வேண்டவே வெண்டளை சினத்தாலானும், "மொழிபடுத் திசைப்பினும் தெரிந்து வேறிசைப்பினும், எழுத்தியல் திரியா என்மனார் புலவர்" என எல்லாவெழுத்திற்கும் பொதுப்படக் கூறிய விதியோடு முரணி ஐகாரம் தெரிந்து வேறிசைத்தற்கட் டிரியாதெனவும், மொழிப்படுத்திசைப்பின் யாண்டு வரினும் திரியுமெனவும் கூறுதல் பொருந்தாமையானும், "ஓரள பாகும் இடனுமா ருண்டே" என்ற உம்மையான் ஓரளபாகா இடனுமாருண்டு என்பது தானே பெறப்படுதலானும் ஈண்டு இடன் என்றது மொழி இடை கடை என மூன்றேயன்றி வேறலின்மை யானும், ஐகாரம் மொழி முதற்கட் குறுகாதெனவே கொள்க. குறுக்கம் இன்னது எனல் எழுத்தின் குறுக்கமாவது ஒதிய முயற்சியின் மெலிதாக உச்சரித்தல். வடநூலாரும் இதனை சிலகூச்சாரணம் என்பர். (தொல், முதற். விருத்தி. பக். 33, 34) அளபெடை சார்பெழுத்தென வேறாகாமை சிவஞான முனிவர் அளபெடை சார்பெழுத்தென வேறாகாமை முன்னர்க்காட்டப்பட்டது என்பர். காட்டப் பட்டதைக் கீழே காண்க:- "நெட்டெழுத்துக்கள் மொழிக் காரணமாய் வேறு பொருள் தந்து நிற்றலின், அது பற்றி வேறு எழுத்து எண்ணி உயிர் பன்னிரண்டெழுத் தெனப்பட்டன.