பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 ஒன்று மூன்றாய் ஒன்பது வகைப்படும் எனவும் அவ் வொன்பது வகையும் மூக்கின் வளியொடு சார்த்தியும் சார்ந் தாலும் உச்சரிக்குமாற்றால் ஒவ்வொன்று இவ்விருவளத்தாய்ப் பதினெட்டாமெனவும் கூறுப. இவ்வாறே ஏனை எழுத்திற்கும் கொள்வர். அவ்வாறு வேறுபடினும் உயிரெழுத்தாற் தன்மையிற் றிரியாவாய்ப் பதினெட்டும் ஓரினமென்றே கொள்வர். இதனாலும் உயிரளபெடை உயிரின் வேறாகாமை உணர்க. இதனானே ஒற்றளபெடையும் ஒற்றின் வேறன்மை உணர்க" என்பர். (தொல், முதற். விருத்தி, பக். 26, 27) பன்னிருபாட்டியல் பகரும் எழுத்து பன்னிரு பாட்டியலில் எழுத்தியல் சில எழுத்திலக் கணங்களைக் கூறும் பிறப்பு என்ற தலைப்பில் பன்னிரண்டு உயிரெழுத்துக்களையும் முதல்வன் படைத்தான் என்றும், பதினெட்டு மெய்யெழுத்துக்களை இரண்டிரண்டாகக் கண்ணுதலும், திருமாலும், முருகனும், இந்திரனும், ஞாயிறும், திங்களும், நிதிக்கோளும், கூற்றுவனும், வருணனும், என்னும் தெய்வங்கள் படைத்தனர் என்று கூறுகிறது. சாதி எழுத்து அந்தணர் சாதி எழுத்து உயிர் பன்னிரண்டும் மெய்யுள் களுவும் சளுவும் டனவும் ஆகும். இவற்றை மேற்கூறியபடி முதல்வன் என்னும் நான்முகனும் கண்ணுதலும் திருமாலும் முருகனும் படைத்தனர். அரசர் சாதி எழுத்து தநவும் பமவும் யரவும் ஆகும். இவற்றை இந்திரனும் ஞாயிறும் திங்களும் ஆகிய தெய்வங்கள் படைத்தனர். வணிக சாதிக்குரிய எழுத்துக்கள் லவ, றன ஆகும். இவற்றை வருணனும்குபேரனும் படைத்தனர். சூத்திர சாதிக்குரிய எழுத்துக்கள் ழள. இவற்றை கூற்றுவன் படைத்தனன்.