பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 அவ்வச் சாதியார்க்கு அவ்வச் சாதி எழுத்தை முதலாக வைப்பது வருணப் பொருத்தமாம். கதி எழுத்து வானவர், மக்கள், நரகர், விலங்கு எனக் கதி நான்கு. உயிருள் அ, இ, உ, எ மெய்யுள் வல்லினத்தில் கசடதப ஆகிய ஒன்பதெழுத்தும் வானவர் கதி. உயிருள் ஆ, ஈ, ஊ, ஏ, மெய்யுள் மெல்லினத்தில் ங்ளுணநம ஆகிய ஒன்பதெழுத்தும் மக்கட்கதி. உயிருள் ஒஒவும் மெய்யுள் யரலறழவும் ஆகிய ஏழு எழுத்தும் விலங்கின் கதி. எஞ்சிய ஐ, ஒள, ஆய்த எழுத்தும் மெய்யுள் வ, ள, னவும் நரகர் கதி. கதிப் பொருத்தமாவது தேவர், மக்கள், செய்யுள் முதற்சீரில் வருதல் நன்று. விலங்கும் நரகரும் வருதல் நன்றன்று. உண்டி அமுதம் என்றும் நஞ்சு என்றும் உணவு இரு வகைத்தாகும். அ, இ, உ, எ என்னும் நான்கு உயிரும், க, ச, த, ப, ந, ம, வ, என்னும் மெய்யெழுத்தும் இவ்வுயிர் மெய்யும் அமுத எழுத்தாகும். ஆ ஓ இரண்டும் ய, ர, ல மூன்றும் இவ்விருவகை உயிர்மெய்யும் அளபெடையும் ஆய்தமும் ஐவகைக் குறுக்கமும் நஞ்சு எழுத்தாம். இழை பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார்ந்து நிற்பின் துஞ்சலும் நடுக்கமும் செய்யும். பால் ஆண்பால், பெண்பால், அலிப்பால் என மூன்றே பால்கள். உயிரும் மெய்யும் என்னும் இருவகை ஐங்குறிலும் ஆண்பாலாம். உயிரும் உயிர்மெய்யும் என்னும் நெடில் ஏழும் பெண் பாலாம்.