பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 பல பொருள்களையெல்லாம் தொகுத்து உணர்த்துமிடத்து "எண்வகை மணமும் எழுத்தும் சொல்லும்" என்று குறிப்பிடுவதில் எழுத்தும் ஒன்றாகும். இனி எழுத்து நான்கு வகை: உருவெழுத்தும் உணர் வெழுத்தும், ஒலியெழுத்தும் தன்மையெழுத்தும் என எழுத்தினது விகற்பமும் எழுத்தினது புணர்ச்சியும் எழுத்ததி காரத்துட் காண்க. அ, க, ச, உ, த, ப, ய முதலிய ஆயவெழுத்தும் அ, ச, ல, வ, ர, ங், ய முதலிய இராசி எழுத்தும், கார்த்திகை முதலிய நாள்எழுத்தும், தோபம் முதலிய நால்வகை எழுத்தும், சாதி முதலிய தன்மை எழுத்தும் உச்சாடனை முதலிய உக்கிர எழுத்தும், சித்திர காருடம் முதலிய முத்திற எழுத்தும், பாகியல் முதலிய நால்வகை எழுத்தும், புத்தேள் முதலிய நாற்கதி எழுத்தும், தாது முதலிய யோனி எழுத்தும் மாகமடையம் முதலிய சங்கேத எழுத்தும், கலி முதலிய சங்கேத எழுத்தும், பார்ப்பான் வழக்காகிய பதின் மூன் றெழுத்தும் என்ற இத்தொடக்கத்தனவும், கட்டுரை எழுத்தும், வச்சிரம் முதலிய வடிவெழுத்தும் மற்றும் பலவகையும் காட்டப்பட்ட எல்லா எழுத்தும் வல்லார்வாய்க் கேட்டுணர்க என்பர் (யா, விருத்தியாசிரியர் - பக் 577) இவற்றுள் ஆய எழுத்து என்பது கூட்டு எழுத்தை உணர்த்தும். ஆ என்பது உயிரெழுத்தின் கூட்டத்தையும் க, ச, ட, த, ப, என்பன ஒவ்வொன்றின் வகையான நான் கெழுத்தையும் ய என்பது ய, ர, ல, வ, என்னும் நான்கையும் உணர்த்தும், அதனால் இவை ஆயவெழுத்து என்று கூறப்பட்டன.