பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 உணர்தல் 'உணர்தல் என்பது ஒருவன் உலகப் பொருள்களைப் புலனாலும், மனத்தாலும் அறிந்து கொள்ளுதலாம். எனவே அவ்வுணர்ச்சி புலனுணர்வு என்றும் மனஉணர்வு என்றும் இருவகைப்படுகிறது. உலகில் அப்பொழுது நேர்படும் பொருளைப் புலனால் உணர்வதெல்லாம் புலனுணர்ச்சி யாகும். ஐவகைப் புலனும் அவ்வப்பொழுது அறிந் துணர்த்தியவற்றைத் தன்னிடத்தே வைத்துக்கொண்டு புலன் இன்று உணர்ந்து தரும் பொருளை அன்றறிந்தவற்றோடும் இன்று அறிபவற்றோடும் கூட்டி உணர்வது மனஉணர்வாகும். 'மனிதன்' என்னும் சொற்கு மனஉணர்வைச் சிறப்பாக உடையவன் என்று அறிஞர் பொருள் கூறுகின்றனர். தொல்காப்பியர், ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்ட்றி வதுவே அதொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு முக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே என்று ஐம்புல அறிவைக் கூறிவிட்டுப் பின்னர், ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே என்று ஆறாவதாக மன அறிவைக் கூறுகின்றார். இந்நூற்பா உரையுள் இளம்பூரணர் இவ்வாறு அறிதலாவது:- உடம்பினால் வெப்பம் தட்பம் வன்மை மென்மை முதலியன அறியும். நாவினால் கைப்பு காழ்ப்பு துவர்ப்பு உவர்ப்பு புளிப்பு மதுரம் என்பன அறியும். மூக்கினால் நன்னாற்றம் தீநாற்றம் என்பன அறியும் கண்ணினால் வெண்மை செம்மை பொன்மை பசுமை கருமை நெடுமை குறுமை பருமை நேர்மை வட்டம் கோணம் சதுரம் முதலியன அறியும். செவியினால் ஓசை வேறுபாடும் சொற்படும் பொருளும் அறியும்.