பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 வடநூல் துறையும் தென்திசைத் தமிழும் விதிமுறை பயின்ற நெறியறி புலவன் அன்பருள் நாண்ஒப் புரவுகண் ணோட்டம் நன்றறி வாய்மை நற்றவ முடையோன் இத்தகை யன்றி, ஈசன தருளால் உய்த்துணர் வுடையவோர் உண்மை யாளன்: பரிமே லழக னெனப்பெயர் படைத்துத் தரைமேல் உதித்த தலைமை யோனே (திருக்குறள் - உரைப்பாயிரம்) பர்மேலழகர் பெற்றிருந்த உய்த்துணர்வு இறைவன் திருவருளால் தோன்றியதென்று இப்பாடலில் கூறப்பட் டுள்ளது. திருவள்ளுவர் மேலே குறிப்பிட்ட நுணுகி உணர்தலைக் குறித்து, நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று என்று கூறுகிறார். இக்குறளில் நுழை என்பதற்கு ஆராய்தல் என்றும், புலம் என்பதற்கு அறிவு என்றும் பொருள் கொள்ள வேண்டும். நுண்ணிதாய் மாட்சிமை யுடைத்தாகி நூல்களை ஆராய்ந்து பார்க்கும் அறிவு நுண்மாண் நுழை புலம் ஆகும். எனவே, ஒன்றை நன்றாக அறிதலும், முறையாக உணர்தலும் நுணுகி உணர்தலும் உய்த்துணர்தலும் ஆகிய இவையெல்லாம் மனஅறிவின் வகைகளாகின்றன. இந்த வகையாக அறியும் அறிவுவகையால் மக்கட்கு உணர்ச்சி கிடைக்கிறது. இந்த உணர்ச்சியால் மனிதன் பலவகையில் முன்னேற்றமடைகின்றான். திருவள்ளுவர் மக்களைக் கற்றவரென்றும் கல்லாதவர் என்றும் இரண்டாகப் பிரித்துக் கொள்கின்றார். கற்றவருடன் கல்லாதவரை ஒப்புக் கருதினால் அது மக்களையும் விலங்கையும் ஒப்புக் கருதினாற் போலும் என்று கூறுகிறார். சிந்தாமணியாசிரியர் கற்றல், கற்றதின் மேல் கட்டுரை கூறுதல், தன்மேற்கவி பாடுதல் எனக் கலை மூன்று. இவற்றில் வல்லவர் நால்வரை, குபேர மித்திரன் என்னும்