பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 ஞாபகம் செம்பொருள் நடையினெப் பொருளும் காசின் றுரைப்போன் கமக னாவான் (திவாகரம்) கல்லாத நூல்களும் கற்றோர் விரும்பக் கவிக்கும் நெறியோன் கமக னாவான் (நவநீதப் பாட்டியல்) வாதிப் புலமையாவது; மேற்கொளும் ஏதுவும் எடுத்துக்காட்ட அளவை நூல் இலக்கணத்தில் மாறு படாமல் தன் கொள்கையை நிலைநாட்டிக் கொள்கையை மறுக்கும் மூதுணர்வுடைமையாம். ஏதுவும் மேற்கோளும் எடுத்துக் காட்டி போதி வளைவும் செய்துதன் சொன்னிறீஇ வாதில் பிறர்கோள் மறுப்பான் வாதி (திவாகரம்) மேற்கோள் ஏது விடைநெறி காட்டி நாட்டிய அளவை நன்னூல் வழாமைத் தன்கோள் நிறீஇப் பிறர்கோள் மறுக்கும் மூதுணர் வுடையோன் வாதி யாகும் (நவநீதப் பாட்டியல்) வாக்கிப் புலமையாவது அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களை உலகமக்கள் மனம் விரும்பிக் கேட்குமாறு இனிமையைகக் கூறும் ஆற்றலுடைமையாம். அறம்பொருள் இன்பம் வீடெனும் திறங்கள் கேட்க வேட்க இனியன கூறும் ஆற்ற லுடையோன் வாக்கி யாகும் அறமுத நான்கின் திறந்தமை யிருந்து கேட்போர் சித்தமும் விரும்பக் கிளக்கும் தோற்ற முடையோன் வாக்கிய மாகும் (நவநீதப்பாட்டியல் மேற்கோள்) இனி முதற்கண் கூறிய கவிப்புலமையை ஆராய்வோம். மேலே சிந்தாமணி உரையில் நச்சினார்க்கினியர் கற்றல் கட்டுரைத்தல் கவிபாடுதல் என்று மூன்று கலையினைக்