பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201 குறிப்பிட்டார். இங்கே கூறிய கமகப்புலமை வாதிப் புலமை வாக்கிப் புலமை என்னும் மூன்றும் அங்கே கூறிய கட்டுரைத்தல் என்னும் கலையில் அடங்கும். இங்கே முதலிற் கூறிய கவிப்புலமை அங்கே ஈற்றிற் கூறிய கவிக்கலையுள் அடங்கும். 'கவி என்பது பாவிற்குப் பெயர். "துக்கும் யாப்பும் செய்யுளும் கவியும், பாட்டும் கவிதையும் பாவெனப் டுமே" என்னும் திவாகர நூற்பாவின் படி துரக்கு முதலிய ஆறுபெயர்களும் பாவிற்கு உரிய பெயராகும். அவற்றுள் ஒன்று கவி, கவிதை. து.ாக்கு தாளத்தோடு கூடிய பாட்டு. இது ஒசை பற்றிய பெயர். யாப்பு எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, தூக்கு இவற்றால் யாப்பது கட்டுவது. இது யாத்தலால் யாப்பாயிற்று. செய்யுள் நால்வகைச் சொல்லால் பொருட்கு இடனாக வல்லவர் அணிபெறச் செய்வது, செய்யுளாம். இதுவும் தொழிலாற் பெற்ற பெயராகும். பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற் பல சொல்லாற் பொருட்கிடனாக உணர்வினில் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள். பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல சொல்லாற் பொருட்கிடனாக உணர்வினில் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் நன்னூல்) பாட்டு பரந்த ஓசையை யுடையது. கவி, கவிதை கருத்தினை உடையது, பல்வகை அறிவிதி திறன் அமைந்தது என்றபொருளில் இச்சொற்கள் வருகின்றன. இவை பண்படியாக வந்த பெயர். குதிரை வாய்பெய் கருவியும் குரங்கும் புலமையில் ஒன்றும் வெள்ளியும் கவியெனல் என்ற பிங்கல நிகண்டின்படி கவி என்னும் சொல் கடிவாளத்திற்கும், குரங்கிற்கும், புலமையில் ஒன்றிற்கும் வெள்ளி என்னும் கோளற்கும் பெயராகும். புலவன்